உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

திவ்வியவதானம் ஜாதகமாலை என்னும் பௌத்த நூல்களில் கூறுப்படுகிற இந்தக் கதையைப் பிள்ளையவர்கள் நேரில் படித்து அறிந்ததாகத் தெரியவில்லை. படித்திருந்தால் இந்தக் கதையைக் கண்ணகியின் கதையுடன் பொருத்திக் கூறமாட்டார். ரூபாவதி என்னும் பௌத்தப் பெண்ணின் கதைதான் இந்த நூல்களில் கூறப்படுகிறது. அக்கதை இது: பசியினால் வருந்திய ஒரு பெண் உணவு கிடைக்காமல் அலைந்து கடைசியில் தன்னுடைய குழந்தையைக் கொன்று தின்பதற்குத் துணிகிறாள். இதையறிந்த ரூபாவதி என்னும் பௌத்தப் பண்மணி தன்னுடைய கொங்கையை அறுத்து அவளுக்கு ஆகாரமாகக் கொடுத்தாள். இதுதான் ரூபாவதியின் கதை. இந்த ரூபாவதியே பிற்பிறப்பில், ஒரு முனிவராகப் பிறக்கிறாள். அப்போது காட்டிலே புலி ஒன்று குட்டிகளை ஈன்று, பசி பொறுக்கமாட்டாமல், உணவு கிடைக்காத நிலையில், தன் குட்டியைக் கொன்று தின்ன முற்படுகிறது. இதையறிந்த முனிவர் (முன் பிறப்பில் ரூபாவதியா யிருந்தவர்) அந்தப் புலிக்குத் தம்மையே உணவாகக் கொடுக்கிறார். பிற்காலத்தில், புத்தராகப் பிறக்கப் போகிற போதிசத்துவர்கள், பாரமிதைகளைச் செய்தததாகப் பௌத்த நூல்கள் கூறுகின்றன. போதிசத்துவர் பார மிதைகளைச் செய்யும்போது தம்முடைய கணக்குகளைப் பிடுங்கித் தானமாகக் கொடுத்ததையும், தம் உடம்பிலுள்ள இரத்தத்தைத் தானமாகக் கொடுத்ததையும் தம் உடம்பையே தானமாகக் கொடுத் ததையும் பௌத்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன. இந்த முறையில், போதிசத்துவர் நிலையில் இருந்த ரூபாவதி, தன் கொங்கைகளை அறுத்துப் பசியோடிருந்த பெண்ணுக்கு உணவாகக் கொடுத்தாள் என்று பௌத்த நூல் கூறுகிறது.

ரூபாவதி கதைக்கும் கண்ணகி கதைக்கும் என்ன பொருத்தம் இருக்கிறது? கண்ணகியும் திருமாவுண்ணியும் உண்மையாகவே கொங்கையை அறுத்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், ரூபாவதியைப் போல உணவுக்காக, மாமிசதானம் செய்யவா அப்படிச் செய்தார்கள் கருத்தை நன்றாக அறியாமல் குதிரைக்கும் குர்ரம், ஆனைக்கு அர்ரம் என்று கூறுவதுபோல, வையாபுரியார் இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறுகிறார். வாசகர்களின் மனத்தைக் குழப்பி மருளச் செய்வதற்கு இது பயன்படுமே தவிர, உண்மை யாராய்ச்சிக்கு வழிகாட்டப்பயன்படாது. நிகழ்ச்சி ஒன்றே ஆயினும் காரணமும் சூழ்நிலையும் வெவ்வே றானவை. இது சாதாரண அறிவினருக்கும் நன்கு விளங்கும். ரூபாவதி