உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

171

வனும் அவனுடைய இராணியும்) மலைகாண்குவம் என்று வந்து கண்ட அன்றே வஞ்சி”க்குச் சென்றபடியினாலே, செங்குட்டுவன் காணவந்த மலை கடற்கரையில் இருந்த வஞ்சி நகரத்துக்கு அருகில் இருக்கும் (இப்படி ஒரு குன்று இருக்கிறதா?) குன்றில் தான் கண்ணகியார் உயிர் விட்டிருக்க வேண்டும். அரசன் வந்தபோது இச்செய்தியைக் குறவர் வனுக்குக் கூறியிருக்கவேண்டும் என்பது இவருடைய ஊகம். இவருடைய ஊகத்துக்கு மாறாகவும் எதிர்ப்பாகவும் சான்றுகள் இருக்கின்றன.

சேரன்செங்குட்டுவன் மலைகாண்பதற்கு வந்து கண்டு அன்றைக்கே நகரத்துக்குத் திரும்பிவிடவில்லை. அவன், வாரக் கணக்காக வேனிற் காலம் முடிகிற வரையிலே மலையடிவாரத்தில் தங்கியிருந்தான் என்றும் அவன் தங்கியிருந்த இடம், மலையிலிருந்து இழிந்துவந்த ஆற்றின் கரை மணல் என்றும் சிலப்பதிகாரமும், அவன் மேல் பாடப்பட்ட ஐந்தாம் பத்தும் தெளிவாகக் கூறுகின்றன. சிலப்பதி காரக் காட்சிக் காதையில் இளங்கோவடிகள் இந்த இடத்தைத் தெளிவாகக் கூறுகிறார். “நெடியோன் மார்பிர் ஆரம் போன்று

66

பெருமலை விலங்கிய பேரியாற் றடைகல

இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப" (அடி21)

என்று கூறுகிறார். இதில் தவறு இருக்க முடியாது. ஏனென்றால் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் சென்று அங்கு தங்கினார் என்று சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம்.

'பெருமலை விலங்கிய பேரியாறு' என்பதற்கு அரும்பத வுரையாசிரியர் இவ்வடி விளக்குகிறார்.

"மலையை விலங்கிய ஆறு, பேரியாறு இஃது ஓர் ஆற்றின் பெயர்.” சேரநாட்டில் பாய்கிற பெரியாறு மேற்குத் தொடர் மலையில் உண்டாகி அம்மலையிலிருந்து கீழே இழிந்து நெடுந்தூரம் ஓடிக் கடைசி அரபிக்கடலில் விழுகிறது எல்லோரும் அறிந்ததே. இந்த ஆறு மலை மேலிருந்து கீழே இறங்குகிற அழகான இயற்கை காட்சியுள்ள இடத்தில் செங்குட்டுவன் தங்கினான் என்பது தெரிகிறது. மேலும் செங்குட்டுவன் வந்த மலை, 'துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சுசூழ் சோலைமலை என்று (காட்சிக்காதை, அடி 6-7) கூறுகிற படியால் உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு மலை என்பதும்