உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டம் பாவைக்குத் தோழி நான் கண்டீர்

“செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணராது இருந்தேன்மற் றென் செய்தேன் மொய்குழல் மங்கை! முலைப் பூசல்கேட்ட நாள் அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ தோழீ! அம்மாமி தன்வீவும் கேட்டாயோ தோழி!”

கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டத்தில் விழா மிகச்சிறப்பாக நடந்தது. பிறகு பத்தினிக் கோட்டத்தை அமைத்த சேரன் செங்குட்டுவன், அந்தக் கோவிலுக்கு மானியங்கள் வழங்கி நித்திய பூசை செய்யும்படி தேவந் தியை அமைத்தான். தேவந்தி கண்ணகியின் பத்தினிக் கோட்டத்தில் நாள் தோறும் பூசைசெய்து கொண்டே தன் வாழ்நாளைக் கழித்தாள்.