உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

அணிந்து கொண்டு ஆடினாள். அவளுடைய அணிகளும் ஆடைகளும் ஆடல் பாடல்களும் காண்பவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து மகிழ்ச்சி யளித்தன.

மாதவியினுடைய ஆடற்பாடற் கலைப்புகழ் தமிழகத்துக்கு அப்பாலும் பரவியிருந்தது என்று சொன்னோம் அல்லவா? வட இந்தியாவிலேயும் மாதவியின் கலைப்புகழ் பரவியிருந்தது என்று இளங்கோவடிகள் கூறுகிறார். காவியப்புலவருக்கேயுரிய கற்பனை நயத்துடன் இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் காவியத்திலே இதை வெகு அழகாகக் கூறுகிறார். இமயமலைக்கு அப்பால் வடசேடி என்னும் இடத்திலே தன் காதலியுடன் இருந்த விஞ்சையன் ஒருவன், காவிரிப்பூம்பட்டினத்திலே இந்திரவிழாவின்போது மாதவி நிகழ்த்துகிற டல்பாடல்களைக் கண்டு மகிழ எண்ணினான். அவன் தன் காதலியுடன் ஆகாய வழியே பறந்துவந்து பூம்புகாரில் இறங்கி மாதவியின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தான் என்று காவியப் புலவர் கற்பனை செய்கிறார்.

விஞ்சையருக்கு வித்தியாதரர் என்றும் பெயர் உண்டு. அவர்கள் இசை நாட்டியம் நடனம் முதலிய அழகுக்கலைகளை அறிந்தவர். அக் கலைகளைக் கண்டுங் கேட்டும் நுகர்ந்து ரசிப்பவர். விஞ்சையர் தேவர்களுக்குத் தாழ்ந்தவராகவும் மனிதருக்கு மேம்பட்டவராகவும் கருதப்படுபவர். ஆகாயவழியே பறந்து போகும் ஆற்றல் உள்ளவர். இத்தகைய விஞ்சையரில் ஒருவன் இமயமலைச் சாரலில் வடசேடியில் இருந்தபோது தன் காதலியாகிய விஞ்சைமகளுக்குக் கூறினான்: பூம்புகார் நகரத்திலே இந்திரவிழா நடக்கிறது. அந்த விழாவில், இசைக் கலை நடனக்கலைகளில் பேர்போன மாதவி மங்கையின் கலை நிகழ்ச் சிகள் நடைபெறுகின்றன. நாம் போய் அவற்றைப் பார்த்து மகிழலாம். இவ்வாறு கூறிய விஞ்சையன் விஞ்சைமகளுடன் புறப்பட்டு ஆகாய வழியே வேகமாகப் பறந்து காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்தான். அவ் விஞ்சையர் வந்த வேகம் வாயுவேகம் மனோ வேகமாக இருந்தது. ஆகாய வழியே தெற்கு நோக்கிப்பறந்த அவர்களுக்குக் கீழே பாய்ந் தோடும் கங்கையாறு காணப்பட்டது. பிறகு அவந்தி நாட்டின் தலை நகரமாகிய உஞ்சை (உச்சயினி) நகரம் தென்பட்டது. அடுத்தாற் போல் விந்தியமலையும் காடுகளும் புலப்பட்டன. அதற்கடுத்து வேங்கட மலை காணப்பட்டது. உடனேசோழநாடு தென்பட்டது. இவ்வளவு