உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இப்போது மேடைஏறமாட்டாள். மேலும் பௌத்த மதத்தில் புகலடைந்து விட்டாள் கணிகைத்தொழிலை அடியோடுவிட்டுவிட்டாள். நல்ல அழகி, தேர்ந்த பாடகி, சிறந்த நர்த்தகி! அவளுடைய இனிய ஆடல் பாடல் களை இனி எப்போது கேட்கப்போகிறோம்! என்று கலை ரசிகர்கள் நகரத்தில் பேசிக்கொண்டார்கள்.

நகரத்தில் இந்திரவிழா தொடங்கின போது சித்திராபதிக்கு மனம் துடித்தது. தன் மகள் மாதவி அரங்க மேடைக்கு வரமாட்டாள் என்று அறிந்தபோது அவளுக்கு உயிரேபோய்விட்டது போல இருந்தது. தன்னுடைய மகளின் இடத்தை (அரங்க மேடையை) இன்னொரு விட்டுக் கணிகை கைப்பற்றி விடுவாளே என்று பொறாமை எண்ணம் அவளுடைய மனத்தை அலட்டியது அவள் வயந்தமாலை என்னும் தோழியை அழைத்து, அவளை மாதவியிடம் அனுப்பிக் கலையரங்கத் துக்கு வந்து கலைநிகழ்ச்சிகளைச் செய்யும்படி மீண்டும் வேண்டினாள். மாதவி கண்டிப்பாக மறுத்துவிட்டாள். புத்த தன்ம சங்கம் என்னும் மும்மணிகளை அடைக்கலம் புகுந்து பஞ்ச சீலம் பெற்று பௌத்தராக வாழ்கிறோம். இனி, மீண்டும் முன்னைய தொழிலுக்கு வர மாட்டோம். இச்செய்தியை நீ போய் என் தாய்க்குச் சொல் என்று வயந்த மாலையிடம் மாதவி கூறினாள்.

மாதவியைக் கணிகை வாழ்க்கையில் மீண்டும் புகுத்தச் சித்திரா பதி செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகப் போயின. மாதவி குலமகள் போலக் கைம்மை நோன்பு நோற்றுக்கொண்டு புத்தர் பெருமானை வணங்கிக் கொண்டிருந்தாள். மாதவி கடைசி வரையில் பெளத்த மதத்தில் நின்று வாழ்நாளைக் கழித்தாள். காவிரிப்பூம் பட்டினம் வெள்ளப் பெருக்கினால் மூழ்கியபோது மாதவி, அறவண அடிகளுடன் காஞ்சீ புரஞ் சென்று அந்த நகரத்தில் தங்கியிருந்தாள். (அறவண அடிகள் காஞ்சீபுரத்தில் தங்கியருந்த தெரு அறவணஞ்சேரி என்று பெயர் பெற்றது. அந்தப் பெயர் இப்போது அறப்பணஞ்சேரி என்று மருவி வழங்கப்படுகிறது. (சேரி என்றால் தெரு என்பது பொருள்.) மாதவி, காஞ்சீபுரத்தில் நெடுங்காலம் தங்கியிருந்து கடைசியில் அந்த நகரத்திலே காலமானாள்.

கோவலனோடு வாழ்ந்த வரையில் மாதவியின் வாழ்க்கை இன்ப வாழ்க்கையாக இருந்தது. அவன் இறந்த பிறகு அவள் வாழ்க்கை யிரற்ற வாழ்க்கையாக மாறிவிட்டது. அவள் நல்ல குலத்தில் பிறந்