உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

'மணங்கமழுந் தாமரையின் மதுத்திவலை

கொப்பளித்து மதர்த்து வாமன் அணங்கிவர்சே வடியினழ கெழிலோரார்

ஒளிபருகி யலரும் போலும்.

"அரும்பிவரும் அரவிந்தம் அறிவரன தடிநிழல தடைந்தோ மென்று சுரும்பிவரி இசைபாடச் செம்மாந்து

66

சுடருமிழ்ந்து துளும்பும் போலும்.

'அழலணங்கு தாமரையார் அருளாழி

யுடையகோன் அடிக்கீழ்ச் சேர்ந்து

நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து

தோடேந்தி நிழற்றும் போலும்.

மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண

முழுதுலக முடியெழின் முனைவயிரம் நாற்றித்

தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்

சுடரோயுன் அடிபோற்றிச் சொல்லுவ தொன்றுண்டால்;

சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச்

சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப்

பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து,

புலங்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே.

205

ஆருகதரின் அருகக் கடவுள் மலர்மிசை ஏகினவன் என்பதற்கு இன்னும் ஐயமுண்டோ? தாமரை, அருகக் கடவுளின் ஊர்தி என்பதைச் சமண நூலாகிய திருநூற்றந்தாதி கவிநயத்துடன் கூறுவது காண்க:

66

'தாமரையே எத்தவங்கள் செய்தாய்!

சகம்மூன் றினுக்குந்

தாமரைசே என்று சாற்று

போலும் முச் சத்திரத்துத்

தாமரைசேர் திருவைத் திருமார்பிற்

றரித் தவர்செந்

தாமரையேய் சரணந்தலை மேற்கொண்டு

தாங்கு தற்கே

99

ஜைன நூலாகிய நீலகேசியின் அவையடக்கச் செய்யுள்களாலும் அருகன் மலர்மிசை ஏகினவன் என்பதை அறியலாம். அச் செய்யுள் இது: