உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

"கரியமணச் சமண் காடியாடு கழுக்களால்

எரிய வசவுணுந் தன்மையோ ...

وو

(முடிப்பது கங்கை 9)

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில், ஜைனர் (சமணர்) களைப் பற்றியும், பௌத்தர்களைப் பற்றியும் இவ்வளவு குறிப்புகளைத் தருகிறார். வையாபுரிப் பிள்ளையவர்கள், சுந்தரர் தேவாரத்தில் ஒரு குறிப்புக்கூட இல்லை என்று மறைக்கிறார். தமிழாராய்ச்சித் துறை மாணவர் களுக்கு வழிகாட்டிக்கொண்டு, பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்தவரின் ஆராய்ச்சி இது. பிள்ளை அவர்கள் எழுதிய நூல்களில் இதுபோன்ற “ஆராய்ச்சி”கள் பல உள்ளன. தமிழ் ஆராய்ச்சி யில், “வையாபுரிப் பிள்ளை பரம்பரை” ஒன்று சென்னையில் உருவடைந்து வருகிறது. இந்தப் பரம்பரை பிள்ளை யவர்களின் போக்கைத் தழுவிச் செல்கிறது.

வையாபுரிப் பிள்ளை நல்ல பதிப்பாசிரியர். அவர் பதிப்பித்த நூல்கள் சிறந்த பதிப்புகள். அதற்காக அவருக்குத் தமிழுலகம் நன்றி செலுத்துகிறது. ஆனால், அவர் சொந்தமாக எழுதிய நூல்களைப் பற்றி விழிப்பாக இருக்கவேண்டும். அவர் எழுதிய நூல்களிலே குழிகளும், பள்ளங்களும் உள்ளன; தவறான முடிவுக்கு அழைத்துச் செல்லும்பல வழிகள் உள்ளன; என்பதை வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டி யிருக்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தைப் பற்றி எவ்வாறு நேர் மாறாக எழுதியிருக்கிறார் பாருங்கள்!! பிற பின்

6

-