உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

285

பொழிப்பு: மலத்திரயங்களைக் கழுவப்பட்ட சிவஞானிகள் கூட்டம் பொலிவு பெறத்தக்க வனப்பையுடைய ஆனந்த நிருத்தஞ் செய்தருள்பவன்.

மூன்றாமடி

பதப்பொருள்: பூசு - திருநீற்றையுத்தூளிக்கப்பட்ட, உரர் . மார்பையுடையவர், சேர்பு- அரிதல், உளந்தராய் - தள்ளுதல், யவன் யௌவனம், பொன் - அழகு, அடி - மூலம்.

பொழிப்பு: சர்வாங்கமு முத்தூளனம் பண்ணின மார்பையுடைய சிவஞானிகளும், புண்ணிய பாவக்கட்டை யரிந்து விசுவத்தைத் தள்ளப்பட்ட சிறப்பையுடையருமாயிரா நின்றவர்களுக்கு மிகுதியான மூலமாயுள்ளவன்.

உந்தராய் என்பது ஊந்தராயென நீண்டது.

நான்காமடி

-

பதப்பொருள் : பூசுரர் மறையோர், சேர் திரட்சி, பூந்தராயவன் பூந்தராயென்னுந் திருப்பதியிலே யுள்ளவன், பொன்னடி – அழகிய திருவடித்தாமரை.

பொழிப்பு: மறுவிலா மறையோர் வாழ்கின்ற திருப்பூந்தரா யென்னுந் திருப்பதியின்கண் வீற்றிராநின்ற சிவனது அழகிய திருவடித் தாமரை யென்னை யாண்டிடுவதாக. (பூந்தரா யென்பது சீகாழி.)

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்

முதலடி

-

7

மேலீடு,

பதபொருள் : செருக்கு மயக்கம், வாய்ப்பு உடையான் - கேடு செய்யான், சிரபுரம் - மேலாகிய இருப்பு, என்னில் என்னுடைய போதமே.

பொழிப்பு: தனது திருவடிப் பிரசாத மில்லாதார்க்கு மலமயக்கத் தின் மேலீட்டைக் கெடாத சிவனுக்கு விசுவா தீனமான இருப்பிடம் எனது சைதனியமே.