உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

311

அதுவன்றி, துரியோதனுக்கு ஆபத்து விளைந்த விடத்து மற்று அவனால் முன்னம் செய்யப்பட்ட உபகாரத்துக்கு யானும் சிறிது பிரதியுபகாரமாக அவனுக்குப் போர்விளைந்த யுத்தமண்டலத்து நிகழப்பட்ட கசதுரங்க பதாதிகளோடும் சர்வாயுதங்களோடு மவன்மேல் வரப்பட்ட வினைகளையும் விநாசஞ் செய்து, என் சர்வ சக்தி யெல்லாம் வஞ்சியாமற் காத்துக்கொண்டு, இரண முகத்திலுள்ள சத்துரு பக்ஷத் தாரும் பரராஷ்டிரத்துச் சர்வக்ஷத்திரியரும் காணப் போர் மலைந்து, யுத்த பூமிவிட்டு நீங்காது துரியோதனன் கண்டு களிகூரச் சர்வாயுதங் களாற் சலிப்புண்டு குருதிப்புனற் குளித்து, யானைக் கோடுகளாற் குத்துண்டு, வீரசுவர்க்கம் பெறுவதன்றி, மற்று என்னாற் பேசத்தக்க தில்லை யென்று அநேகஞ் சொல்லிக் குந்திதேவியை நோக்கி நமஸ் கரித்து, உனக்கு வேண்டுவன வேண்டி என்பக்கல் வாங்கிக் கொண்டு ஈண்டன் எழுத்தருள்வாயாக என்று கன்னன் சொல்லக் கேட்டுப் பொறியற்ற கருவிபோல அறிவற்று மயங்கிக் கண்ணீர்மல்கி யாது சொன்னாள் குந்திதேவி:

உம்பரிக லேறுபோ லுற்றெழுந்த வஞ்ஞான்று தம்பியரைக் கொல்கை தவிரென்றாள் - நம்பி யியலாரும் வேலங்க நீணாடன் றன்னைக் குயிலாரு மென்மொழியாள் கூர்ந்து.

நீ உற்றெழுந்த சமர பூமியில் வெற்றி கொள்ளுமிடத்து மற்று உன் பிரதாக்கள் ஐவரையும் இரட்சித்துக் கொள்வாயாக வென்று குந்திதேவி கூறக்கேட்டு, யாது சொன்னான் கன்னன்:

பார்த்தனையான் கோற லவன்கைப் படுதலெனும் வார்த்தை யுரைசெய்தேன் மனமகிழ - வேற்கும்

பொருவெஞ் சமர்தன்னிற் போந்தெதிர்ந்தான் மற்றாங் கொருவருந்தா மில்லை யெதிர்.

என்றிவ்வகை அருச்சனனை யான் கொல்லல், மற்று அவன் கையில் யான் படுதல் - இரண்டில் ஒன்று ஆமென்று பரராஷ்டிரத்து க்ஷத்திரியர் பலருங் கேட்கச் சொன்னேன்; இது தவிராது; யானும் அவனுமொழியத் தீங்கு ஒருவர்க்குஞ்செய்யே னென்று சொல்ல, பொறியற்ற பாவைபோல் அறிவற்று அகஞ் குழைந்து யாது வேண்டிக் கொண்டாள் குந்திதேவி :