உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

மாழைஒண்கண் பரவையைத் தந்தாண்டானை மதியிலா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் எல்லைகாப்பது ஒன்றில்லையாகில் நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றறை ணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

அகத்தடிமை செய்யும் அந்தணாளன்

அரிசிற் புனல்கொண்டு வந்தாட்டுகின்றான்

மிகத்தளர் வெய்திக் குடத்தைநும்

முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்

வகுத்தவனுக்கு நித்தற் படியும்

வருமென் றொரு காசினை நின்றநன்றிப்

புகழ்த்துணை கைபுகச் செய்துகந்தீர்

பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.

திருமுகப் பாசுரம்

315

12

11

13

14

திருவாலவாயுடையார் சேரமான் பெருமாள் நாயனாருக்கு

அருளிச்செய்த திருமுகப் பாசுரம்.

நேரிசை யாசிரியப்பா

"மதிமலி புரிசை மாடக் கூடற்

பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை யன்னம் பயில்பொழி லால வாயின் மன்னிய சிவனியான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் 17குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்