உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

329

ஓங்குதெங்குஇலை யார்கமுகுஇள வாழைமாவொடு மாதுளம்பல தீங்கனி சிதறும் திருவாரூ ரம்மானே.

பழியுடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து வழியிடை வாழமாட்டேன் மாயமுந் தெளின கில்லேன் அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவரால் அழிக்கப்பட்டுக் கழியிடைத் தோணி போன்றேன் கடவூர் வீரட்டனாரே. தழைத்ததோர் ஆத்தியின்கீழ்த் தாபரம்மணலாற்கூப்பி அழைத்தங்கே ஆவின்பாலைக் கறந்துகொண் டாட்டக்கண்டு பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுத மீந்தார் குறுக்கைவீ ரட்டனாரே.

அருகெலாங் குவளை செந்நெ லகவிலை யாம்பல் நெய்தல் தெவெலாம் தெங்கும் மாவும் பழம்விழும் படப்பையெல்லாம் குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்தி மருவலாம் இடங்கள் காட்டும் வலம்புரம் தடிக ளாரே.

மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட

ஐயமில் அமர ரேத்த ஆயிர முகம தாகி

வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னும் தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவி னாரே.

கரும்பினும் இனியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை இருங்கடல் அமுதந் தன்னை இறப்பொடு பிறப்பி லானைப் பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தைவித்திப் பொய்ம்மையாங்களையை வாங்கிப் பொறையெனும் நிரைப்பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகில் சிவகதி விளையு மன்றே.

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும் பனித்த சடையும்பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.