உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

புதைத்து மணலில் ஒதுக்கிக் கடலில்

போக்கி அழகர் கருணைபோல் பொருநை யாறு பெருகிவார.

புதுமை பாரும் பள்ளீரே.

وو

ஷ பள்ளு சித்திரா நதியின் சிறப்பை இவ்வாறு கூறுகிறது.

"குற்றாலத் திரிகூட மால் வரை

யுற்றே மேகம் பொழிந்த நீர் கூடிப் பொருநை நாடித் திருமுக் கூடற் பதியை வலங்கொண்டே வற்றா மடுவிற் பரவை, குரவை

வாளை, கோளை, தேளி மீன், மயிந்தி, உழுவை, அயிந்தி, கூனி., மணலி, ஆரால், ஒராமின், பற்றா அயிரை, கெண்டை, கெளிறு, பருவராலும் அணையிலே

பாயக் காலிற் பாயக் குளத்திற் பாய வயலிற் பாயவே, சிற்றாரென்பது பெற்றாலும் ஒரு

சிறியவர் மனப் பெருமைபோல்

சித்ரா நன்னதி பெருகி வார

சித்திரம் பாரும் பள்ளீரே,

433

இந்தப் பள்ளில் பஞ்சலை மீனும், கெண்டை மீனும் மாதர் கண்களுக்கு உவமை கூறப்படுகின்றன:

"பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே

அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும்

என்பது அச்செய்யுள் அடி.

99

திருமலை முருகன்பள்ளு என்னும் நூலில் கீழ்கண்ட மீன்களின்

பெயர்கள் கூறுப்படுகின்றன.