உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

437

களுத்தி : வகையைச் சேர்ந்தவை. (கெளுத்தி, கெழுத்தி என்றும் வழங்கும்) பொருகெழுத்தி, இறுங்கெழுத்தி, நெடுமாங் கெழுத்தி, கருங்கெழுந்தி, உண்டைக்கெழுத்தி, ஈசாங்கெழுத்தி, வெள்ளைக்கெழுத்தி,

சுறா: இது மகரம் என வழங்கப்படுகிறது. இதன் வகை: கொம்பன் சுறா, பால்சுறா, குரங்கன்சுறா, செஞ்சுறா, கோம ராஸ்சுறா, கருமுளிசுறா முதலியன.

கவலைமீன்: கொடகவலை, செல்கவலை, ஒலைகவலை, தொணலைக்கவலை.

وو

உல்லம்: "உள்ளத்தை விற்று உல்லத்தை உண், என்று இம்மீனைப்பற்றி ஒரு பழமொழி வழங்குவதாகக் கூறுகிறார்கள். வஞ்சிரம், மாவுலாசி, கோல்மாவுலாசி, வெள்ளரா, படுலஞ்சிரம் முதலியவை இதன் இனத்தைச் சார்ந்தவையாம்.

கோலா: இதன் வகை : பருவகோலா, சப்பைக் கோலா, தாக் கோலா அல்லது பறவைக்கோலா (இது பறக்குமாம்), பாம் பன்கோலா, கருவேல்கோலா, மயில்கோலா. இந்த மீன்களுக்கு வாயில் நீண்ட கொம்பு உண்டாம்.

வௌவால்மீன்: கறுப்பு வெளவால், வெள்ளை வௌவால், மோலாசு வௌவால்.

திருக்கைமீன்: இந்த

மீன்களுக்கு வால் கயிறுவோல் நீண்டிருக்கும். வாலில் முட்கள் உண்டு. இந்த வாலினால் அடித்தால், அடியுண்டவர் சதை பிய்ந்துவிடும். இதன் வகைகள்: பாஞ்சாலந் திருக்கை, புள்ளித்திருக்கை, குருவித்திருக்கை, மட்டைத்திருக்கை, செம்மந்திருக்கை, சக்கவாளத்திருக்கை, கொம்பன் திருக்கை, திமிலத் திருக்கை, (இதன் உடலில் மின்சார சக்தி உண்டு. ஆகவே, இதைத் தொட்டால், மின்சாரத்தைத் தொட்டால் இழுப்பதுபோல சிவுக்கென்று இழுக்கும்.) இந்த மீன் பெயரால், "திருக்கைக் கலியாணம்” என்னும் ஒரு சிறு நூல் உண்டு.

வாளை : இது கடலிலும் உண்டு; நன்னீர் உள்ள நீர்நிலைகளிலும் உண்டு. இதைப்பற்றித் தமிழ் இலக்கியங்களில் அடிக்கடி கூறப் படுவதைக் காண்கிறோம். தட்டையாய் நீண்டிருக்கும், “வாளைமீன்