உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

வணங்குகின்ற இக்காலத்து இந்துக்கள், இந்த வணக்கத்தை உண்டாக் கியவர் பௌத்தர் என்பதை அறியார். ஆனால், இவ் வணக்கத்தை உண்டாக்கியவர் பௌத்தர் என்பது மறுக்க முடியாத உண்மை.

5. மடங்கள் ஏற்படுத்தியது

சைவ, வைணவ, ஸ்மார்த்த மதத்தினர் மடங்களை அமைத்து, அவற்றில் தத்தம் மதத் தலைவர்கள் இருந்து சமயத் தொண்டாற்ற ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இவைகளுக்கு 'மடம்' என்றும், 'சிம்மாசனம்' என்றும், ‘பீடம்' என்றும் பெயர்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையங்கள் பௌத்தரின் பள்ளிகளைப் பின்பற்றி அமைக்கப் பட்டவை என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. பௌத்த மதத்தின் உயிர் நாடியாயிருந்தது சங்கம். சங்கம் என்பது பௌத்தத் துறவிகளின் கூட்டம். இந்தத் துறவிகள் ஊர்தோறும் விகாரை அல்லது மடங்களை அமைத்து, அவற்றில் தங்கி நாட்டு மக்களுக்கு மத போதனை செய்து தங்கள் சமயத்தைப் பரவச் செய்து வந்தார்கள். இந்த நிலையங்களை முதல் முதல் உண்டாக்கிய பெருமை புத்த தேவருக்கே உரியது. புத்தர் இந்த நிலையங்களை உண்டாக்கு வதற்கு முன்னே, துறவிகளும் சமயத் தலைவர்களும் காடுகள், மரச் சோலைகள் முதலிய இடங்களில் வசித்து வந்தனர். பின்னர், பௌத்த மடங்களைப் பின்பற்றி ஏனைய சமயத்தவரும் மடங்கள் அமைக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர்.

6. அத்வைதம் உண்டானது

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கராசாரியரால் உண்டாக்கப்பட்ட ‘மாயாவாத மதம் என்றும், ‘ஏகான் மவாத மதம்’ என்றும் ஸ்மார்த்த மதம் என்றும் சொல்லப்படுகின்ற 'அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கை மகாயான பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டதாக அறிவிற்சிறந்த ஆன்றோர் கூறுகின்றார்கள். அத்வைத மதத்தை உண்டாக்கின ஆதி சங்கராசாரியார் பௌத்த குரு ஒருவரிடம் பயின்ற மாணவர் என்று சிலர் கூறுவர். அங்ஙனம் அன்று சங்கராசாரி யாரின் குரு கோவிந்த பாதர் என்றும், கோவிந்தபாதரின் குரு கௌட பாதர் என்னும் பௌத்தர் என்றும் வேறு சிலர் கூறுவர். அன்றியும், பௌத்த மதத்தின் பிரிவுகளான விஞ்ஞானவாத, சூ னியவாத மதங்கள் அதிகமாகப் பரவியிருந்த சௌராஷ்டிர தேசத்தில் சங்கரர் கல்வி பயின்றார் என்றும், அங்குப் பயின்றபடி யினால்தான் சூனியவாத பௌத்தத்தினின்றும் மாயாவாதக் கருத்தினைப்