உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

கூடுமன்றோ? ஒருவரே வெவ்வேறு நடையில் செய்யுள் இயற்றுவது தேர்ந்த புலவருக்கு மட்டுந்தான் இயலும் என்பது உண்மையே. சீத்தலைச்சாத்தனார், புலவர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடையில் அகப்பொருள், புறப் பொருள் பொதிந்த சில செய்யுள்களை இயற்றினார். ஆனால், புலவர் உலகத்துக்காக மட்டும் அன்று, பாமர உலகத்துக்காகவும் அவர் மணிமேகலையை இயற்றினார். ஆகலின், இது சிறிது, எளிய நடையில் அமைக்கப்பட்டது. தமது மதக் கொள்கையை ஒருசிறு கூட்டத்துக்குமட்டும் தெரிவிப்பது தவறு என்பதும், எல்லா மக்களுக்கும் அதை அறிவிப்பதுதான் சிறந்தது என்பதும் பௌத்தர்கள் கருத்து. ஆகவே, பௌத்தமதக் கொள்கை நிறைந்த மணிமேகலையை இவர் வேண்டுமென்றே சிறிது எளிய நடையில் இயற்றினார் என்று கருதுவதே பொருத்தமானது.

இவர் தாம் இயற்றிய மணிமேகலையில்,

'தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்'

என்று திருக்குறளை மேற்கோள் காட்டித் திருவள்ளுவரைப் புகழ்கின்றபடியால், இவர் திருவள்ளுவருக்குப் பிற்காலத்தவரா வர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. 'மணிமேகலை நூலின் காலம்' என்னும் இணைப்புக் காண்க.

5. சங்கமித்திரர்

இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது சமயக் கொள்கை மகாயான பௌத்தம். இவர் சோழநாட்டில் வாழ்ந்திருந்த காலத்தில், இலங்கையில் கோதாபயன் என்றும், மேவர்ணாபயன் என்றும் பெயருள்ள அரசன் அரசாண்டு வந்தான். இந்த அரசன் கி.பி. 302 முதல் 315 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில் இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில், அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்ஷுக்கள் வைதுல்ய மதத்தை மேற்கொண்டிருந்தபடியால், அவர்களை அரசன் அக்கரைக்கு, அதாவது தமிழ்நாட்டில், நாடு கடத்திவிட்டான். இலங்கை மன்னன் ஈனயான (தேரவாத) பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் ஆகையால், அதற்கு மாறான மகாயான பௌத்தமான வைதுல்ய மதத்தைத் தனது நாட்டில் பரவவிடக்கூடாது