உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

போதித்துத் தாந்திரிக பௌத்த நூல்களைச் சீனமொழியில் மொழிபெயர்த்தார். இவர் அந்நாட்டிலே கி.பி. 730இல் காலமானார்.

18. புத்தமித்திரர்

6

இவர் புத்த மித்திரனார் என்றும் கூறப்படுவார். இவரது பெயரைக் கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம்.

66

“மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால் தொக்கவன் யார்க்குந் தொடராண் ணாதவன் தூயனெனத் தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழ்உரைக்கப் புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே என்னும் இவர் இயற்றிய வீரசோழியப் பாயிரச் செய்யுள் இதனை வலியுறுத்துகின்றது.

இவர், சோழநாட்டில், மாலைக்கூற்றத்தில், பொன்பற்றி என்ற ஊரில் சிற்றரசராய் விளங்கியவர். ‘பொன்பற்றி' என்னும் ஊர் தஞ்சை ஜில்லா புதுக்கோட்டைத் தாலுகாவில் உள்ளது என்பர் சிலாசாசன ஆராய்ச்சியாளர் காலஞ்சென்ற திரு. வெங்கையா அவர்கள். தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கி தாலுகாவில் பொன்பேத்தி என்று இப்போது வழங்குகின்ற ஊர்தான் புத்த மித்திரனாரின் ‘பொன்பற்றி' என்பர் வித்வான், ராவ்சாகிப், மு. இராகவ அய்யங்கார் அவர்கள்.

புத்த மித்திரர் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை இயற்றி யிருக்கிறார். வீரசோழன் அல்லது வீர ராசேந்திரன் என்னும் பெயருள்ள சோழ மன்னன் வேண்டுகோளின்படி இந் நூலை இவர் இயற்றி அவன் பெயரையே இதற்குச் சூட்டினார். இதனை,

“ஈண்டுநூல் கண்டான் எழில்மாலைக் கூற்றத்துப்

பூண்டபுகழ்ப் பொன்பற்றிக் காவலனே - மூண்டவரை வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்றன் சொல்லின் படியே தொகுத்து

என்னும் வெண்பாவினாலும்,

99

"நாமே வெழுத்துச்சொல் நற்பொருள் யாப்பலங் காரமெனும் பாமேவு பஞ்ச அதிகார மாம்பரப் பைச்சுருக்கித்

தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் திருப்பெயரால் பூமேல் உரைப்பன் வடநூல் மரபும் புகன்று கொண்டே'