உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

135

ஆங்கு ஆனந்த வனரதனர் என்னும் தேரரிடம் சமயக் கல்வி பயின்றார். பின்னர், காஞ்சீபுரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தார். பாலி மொழியை நன்கு பயின்றவர். அந்த மொழியில் பஜ்ஜமது என்னும் நூலை இயற்றி யிருக்கின்றார். புத்தரது உருவ அழகினையும், அவர் உபதேசித்த பௌத்தக் கொள்கை. அவர் அமைத்த பௌத்த சங்கம், இவற்றின் செவ்விகளையும் இந்நூலில் வியந்து கூறியிருக்கின்றார். இந்நூல் நூற்று நான்கு செய்யுள்களைக் கொண்டது. இவர் இயற்றிய இன்னொரு ரு நூல் ரூப சித்தி என்பது. “பாட ரூப சித்தி” என்றும் இதற்குப் பெயர் உண்டு. இது பாலி மொழி இலக்கண நூல். இதற்கு ஓர் உரையும் உண்டு. இந்த உரையினையும் இவரே இயற்றினார் என்று கூறுவர். இவர் இயற்றிய ‘பஜ்ஜமது' என்னும் நூல் கி.பி. 1100இல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றபடியால், இவர் பன்னிரண்டாம் நூற்றாண்

முற்பகுதியில் இருந்தவராவர்.

21. அநுருத்தர்

‘அநிருத்தர்' என்றும் இவருக்குப் பெயர் உண்டு. இவர் மூல சோம விகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குத் தலைவராக இருந்தவர். இவர் பாண்டிய தேசத்தவர் என்று தெரிகின்றது. ‘அபிதம்மாத்த சங்கிரகம்’, ‘பரமார்த்த வினிச்சயம்', ‘நாமரூபப் பரிச்சேதம்' என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கின்றார். அபிதம்மாத்த சங்கிரகம்' இலங்கையிலும், பர்மா தேசத்திலும் உள்ள பௌத்தர்களால் நெடுங்காலமாகப் போற்றிக் கற்கப்பட்டு வருகின்றது.

இவர், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர். ஆசிரியர் அநிருத்தர் என்பவர் ஒருவர் பெரும் பிடுகு முத்தரையன் என்னும் சிற்றரசனைப் பாடிய கட்டளைக் கலித்துறையொன்று, திருச்சிராப்பள்ளியை அடுத்த 'செந்தலை' என்னும் ஊரில் உள்ள சிவன் கோயில் சாசனத்தில் சிதைந்து காணப்படுகின்றதைச் 'சாசனப் புலவர்' என்னும் நூலில் வித்வான் ராவ்சாகிப், மு. இராகவ அய்யங்கார் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அவர்கள் காட்டிய செய்யுள் இது:

'போலரசு பிறவா பிறநெடு மேரு நெற்றிப்

பொன்போல் பசுங்கதிராயிரம் (வீசும்) பொற்றேர்ப்பருதிக்

கென்போ தரவிடுமோ வினைச்சோதி யிருவிசும்பே’.