உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

6. அவலோகிதர்

பௌத்தரால் வணங்கப்படும் தெய்வங்களில் அவலோகிதரும் ஒருவர். இவர் மேலே கூறப்பட்ட தெய்வங்களுக்கு மேற்பட்டவர். ஆனால், புத்தருக்குக் கீழ்ப்பட்டவர். இவருக்கு உலகநாதர் என்றும் போதிசத்துவர் என்றும் பெயர் உண்டு. துஷிதலோகத்திலே இவர் இருக்கிறார். அறநெறியைப் பூவுலகத்தில் போதிப்பதற்காகப் புத்தராகப் பிறக்கிறவர் இவரே.

66

"அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து

முடிதயங் கமரர் முறைமுறை யிரப்பத் துடித லோக மொழியத் தோன்றிப் போதி மூலம் பொருந்தி யிருந்து மாரனை வென்று வீர னாகிக் குற்றம் மூன்றும் முற்ற வறுக்கும் வாமன் வாய்மை யேமக் கட்டுரை

யிறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்

என்று மணிமேகலை கூறுவது காண்க.

(30-ஆம் காதை. 7-14)

இந்த அவலோகிதர் இடத்திலே அகத்திய முனிவர் தமிழ் மொழியைக் கற்றார் என்பது தமிழ்நாட்டுப் பௌத்தர்களின் நம்பிக்கை. வீரசோழிய நூலாசிரியராகிய புத்தமித்திரர் இதனைக் கூறுகிறார்.

66

'ஆயுங் குணத்தவ லோகிதன்

பக்கல் அகத்தியன்கேட்

டேயும் புவனிக் கியம்பிய

தண்டமிழ்...

என்று அவர் கூறுகிறார்.

(பாயிரம்)

அவலோகிதரைப் பௌத்தர்கள் வணங்குகிறார்கள். தமிழ் நாட்டிலும் பௌத்தமதம் பரவியிருந்த காலத்தில் அவலோகிதர் உருவ வழிபாடு நடந்து வந்தது. நாகைப்பட்டினத்தில் இருந்து கிடைத்த அவலோகிதரின் செம்பு உருவங்களைச் சென்னைக் காட்சிச் சாலையில் இன்றும் காணலாம்.