உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிக் கலப்பு

2. பௌத்தர் வளர்த்த தமிழ்*

ஒரு மொழியைப் பேசுவோர் வேறு மொழியைப் பேசுகிறவர் களோடு கலந்து உறவாடுகிற போது, தங்கள் தாய்மொழியில் இல்லாத சொற்களை வேறு மொழியிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். தங்கள் தாய்மொழியில் ஏதேனுங் கருத்தை தெரிவிக்கும் சொல் இல்லா மலிருந்து. அக்கருத்தை வெளியிடத்தக்க சொல் வேறு மொழியில் இருக்குமானால் அச்சொல்லை அஃது இல்லாத மொழியினர் ஏற்றுக் கொள்வது வழக்கம். இது தொன்று தொட்டு இன்றுவரையில் உலக மெங்கும் கடந்து வருகிற இயற்கையாகும்.

மொழி அதைப் பேசுகிறவரின் கருத்துக்களை வெளியிடுகிற கருவியாக இருப்பதனாலே ஒருவருக்கு ஒரு புதிய கருத்துத் தோன்றினால், அக்கருத்தை அவர் தம்முடைய தாய்மொழியிலே வெளியிடுகிறார். ஒரு கருத்து வேறு மொழியிலிருந்து பெறப் படுமானால், அக்கருத்தைக் குறிக்கும் அயல் மொழிச் சொல்லை எடுத்து வழங்குவர். வேற்று மொழிச் சொற்களை எடுத்துத் தம்முடைய மொழியில் வழங்குகிறவர். அந்த அயல் மொழிச் சொற்களை அந்த உருவத்திலேயே வழங்காமல் தம்முடைய தாய்மொழியின் இயற்கைக்கு ஏற்ப மாற்றியும். திரித்தும் வழங்குவர். உதாரணம்: ரகர ஒலி இல்லாத சீனர் அந்த ஒலிக்குப் பதிலாக லகர ஒலியை வழங்குகிறார்கள். (அமெரிக்கா- அமெலிகா) முகர ஒலி இல்லாத மொழியினர். ழகரத்துக்குப் பதிலாக ளகரத்தையும், லகரத்தையும் ஒலிக்கின்றனர். (தமிழ்-தமிள, விழிஞம்- விலிஞம்). க்ஷகர ஒலி இல்லாத தமிழர் அதற்குப் பதிலாகக் ககர ஒலியை ஒலிக்கின்றனர். (பக்ஷ-பக்கி, பிக்ஷு--பிக்கு, அக்ஷரம்-அக்கரம்). இவ்வாறு அந்தந்த மொழிக்குத் தக்கபடி வேறு மொழிச் சொற்களைத் திரித்து அமைத்துக் கொள்வது எல்லா மொழிகளுக்கும் இயற்கையாகும்.

இந்த இயற்கைப்படி, உலகத்தில் வழங்குகிற எல்லா மொழிகளிலும் வேறு மொழிச் சொற்கள். (சிறிதளவாகவோ பெரிதளவாகவோ) கலந்துள்ளன. முக்கியமாக வாணிகம், மதம், அரசு (ஆட்சி), நட்புறவு இவற்றின் மூலமாக ஒரு மொழிச் சொற்கள். இன்னொரு மொழியில் கலக்கின்றன. இந்த

உலகத் தமிழ் மாநாடு விழா மலர். 1968.