உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

சைவ சமயத்தவரால் கைக்கொள்ளப்பட்டபோது, சைவ சமயக் கொள்கைகளுக்கு ஏற்ப ஏற்றப்பட்டதையும் காண்கிறோம். இது நிற்க. துண்டில ஜாதகம்

திருவிளையாடற் புராணக் கதைகளில் காணப்படுகிற பன்றிக் குட்டிகளுக்குச் சிவபெருமான் அருள் பொழிந்த கதையும் பௌத்த மதக் கதைகளிலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கதை புத்த ஜாதகக் கதைகளில் 388 ஆவது கதையாகக் காணப்படுகிறது. இந்தக் கதையின் பெயர் "தூண்டில ஜாதகம்" என்பது. இந்தக் கதையின் சுருக்கம் இது :

வாரணாசியில் பிரமதத்த அரசன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், அவ்வூரைச் சேர்ந்த காட்டில் ஒரு காட்டுப் பன்றியின் வயிற்றில் போதிசத்துவர் பன்றிக்குட்டியாகப் பிறந்தார்.சில காலத்துக் குப் பிறகு தாய்ப்பன்றி இன்னொரு குட்டியையும் ஈன்றது. ஒருநாள் தாய்ப்பன்றி குட்டிகளுடன் ஒரு பள்ளத்தில் படுத்திருந்த போது, அவ் வழியாக அவ்வூரைச் சேர்ந்த கிழவி ஒருத்தி தன்னுடைய உடையில் பருத்திப் பஞ்சை எடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அவள் தடியை ஊன்றிக் கொண்டு நடந்தபோது தடியின் சத்தத்தைக் கேட்ட தாய்ப்பன்றி பயந்து ஓடிப் போய் விட்டது. பள்ளத்தில் இரண்டு பன்றிக்குட்டிகள் இருப்பதைக் கண்ட கிழவி அவற்றின்மேல் இரக்கங் கொண்டு அவற்றை எடுத்துத் தன்னுடைய கூடையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். வந்து அப்பன்றிக்குட்டிகளைத் தன்னுடைய குழந்தைகளைப்போல அன்பாகக் காப்பாற்றினாள். மூத்த குட்டிக்கு மகாதுண்டிலன் என்றும் இளைய குட்டிக்கு சுல்ல துண்டிலன் என்றும் பெயரிட்டு வளர்த்து வந்தாள். அவை பெரியவைகளாக வளர்ந்து கொண்டிருந்தன.

அவ்வூரில் பண்டிகை நடந்தது. அந்தப் பண்டிகை நாளில் சில குடியர்கள் மது அருந்தினார்கள். அவர்களுக்கு இறைச்சி வேண்டி யிருந்தபடியால் கிழவியின் பன்றிக்குட்டிகளை விலைக்கு வாங்கிக் கொன்று தின்னத் தீர்மானித்திருந்தார்கள். அவர்கள் அவைகளை விலைக்குக் கொடுக்கும்படி கேட்டார்கள். “என்னுடைய பிள்ளைகளை நான் விற்பதா, போங்கள் நான் விற்கமாட்டேன்” என்று கிழவி கூறினாள். "மிருகங்கள் மனிதருக்குப் பிள்ளைகளாகுமா? அதிக விலை கொடுக்கிறோம். குட்டிகளைக் கொடு” என்று கேட்டார்கள்.