உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் 25

"உன் குழந்தை இறந்துவிட்டதா? அதற்கு உயிர் கொடுக்க வேண்டுமா? நல்லது. மருந்து கொடுக்கிறேன். கொஞ்சம் கடுகு கொண்டு வா.

66

""

இதோ கொண்டு வருகிறேன்" என்று கூறி ஓடினாள்.

“குழந்தாய்!” என்று கூப்பிட்டார் பகவர். கௌதமை திரும்பி வந்து, “இன்னும் ஏதேனும் கொண்டு வரவேண்டுமோ?" என்று வினவினாள். அவளுக்குத் தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

"வேறு ஒன்றும் வேண்டாம். ஒரு பிடி கடுகு மட்டும் வேண்டும். ஆனால், கொண்டுவரும் கடுகு யாரும் சாகாதவர் வீட்டிலிருந்து கொண்டுவர வேண்டும். ஆணோ, பெண்ணோ, பெரியவரோ, சிறியவரோ ஒருவரும் சாகாதவர் வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டுவர வேண்டும். தெரிகிறதா ...

?”

“அப்படியே, இதோ கொண்டு வருகிறேன்.'

"குழந்தையைத்

குழந்தையைக் கொண்டு வா.

தூக்கிக்கொண்டு

وو

போ. கடுகுடன்

கௌதமை இறந்த குழந்தையைத் தூக்கித் தோளில் சுமந்து கொண்டு வேகமாக நகரத்திற்குள் சென்றாள். நகரை யடைந்தவுடன் முதல் வீட்டில் சென்று, “ஒரு பிடி கடுகு வேண்டும்” என்று கேட்டாள். வீட்டுக் காரி உடனே சென்று குடுகு கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது கௌதமை, "அம்மா! உங்கள் வீட்டில் இதற்கு முன்பு யாரேனும் இறந்திருக்கிறார்களா!" என்று கேட்டாள்.

"ஏனம்மா கேட்கிறாய்? என் மாமனார் இறந்தார்; என் மாமியார் இறந்தார். இவர்களுக்கு முன்பு இவர்கள் தாய், தந்தையர்கள் இறந்தார்கள்” என்று அவ்வீட்டுக்காரி கூறினாள்.

66

'அப்படியானால் கடுகு வேண்டாம்" என்று சொல்லித் திருப்பிக் கொடுத்துவிட்டு, அந்த வீட்டைவிட்டு அடுத்த வீட்டிற்குச் சென்றாள். அந்த வீட்டுக்காரியும் கடுகு கொடுத்தபோது “உங்கள் வீட்டில் யாரேனும் செத்திருக்கிறார்களா?” என்று கேட்டாள் கௌதமை.

“போன வாரம் எங்கள் வீட்டு வேலைக்காரன் செத்துப் போனான்." அப்படியானால் கடுகு வேண்டாம்” செத்தவர் வீட்டுக்