உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இன்னும் நான்கு நாட்களுக்குத்தான் சாப்பிடலாமே! ஏன், இன்னும் எத்தனை நாளுக்கேனும் இருந்துவிட்டுப் போகட்டுமே' என்று தனக்குள் எண்ணினான். கடைசியில், "உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள் என்று சொல்லித் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

99

சண்பகம், காலையிலும் மாலையிலும் அறுசுவையுள்ள உணவை ஆக்கிப் படைத்தாள். அவன் திருப்தியோடு, மனம் மகிழ்ந்து சாப்பிட்டான். மூன்றாம் நாள் சண்பகம், கும்பகோசனிடம், “ஐயா! இன்னும் கொஞ்ச நாட்கள் இங்குத் தங்கிவிட்டுப் போகிறோம்” என்று கேட்டாள். அவன் சரி என்று சம்மதித்தான். சண்பகம் தன் மகளுடன் அந்த வீட்டிலேயே தங்கி இருந்தாள்.

ஒரு நாள் அவன் வெளியே போயிருந்த நேரத்தில், கூர்மை யான கத்தியால், சண்பகம், அவன் படுக்கிற கயிற்றுக் கட்டிலில் சில கயிறுகளைக் கீறிவிட்டாள். கும்பகோசன் அன்றிரவு கட்டிலில் படுக்கும்போது சில கயிறுகள் அறுந்துவிட்டன. அவன் “எப்படி இந்தக் கயிறுகள் அறுந்துவிட்டன?" என்று வினாவினான்.

وو

அவள், “அக்கம் பக்கத்துப் பிள்ளைகள் வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்த வேலையாயிருக்கும் என்று பிள்ளைகள்மேல் பழிபோட்டாள்.

66

உங்களால் வந்த வினை இது. நீங்கள் வருவதற்கு முன்பு நான் வெளியே போகும்போது கதவைப் பூட்டிவிட்டுப் போவேன். இப்போது கதவு திறந்திருப்பதனால் பிள்ளைகள் வந்து கயிறுகளை அறுத்து விட்டார்கள்” என்று இரைந்து கூறினான்.

“என்ன ஐயா செய்வது? பிள்ளைகள் வந்தால் வேண்டா மென்று சொல்ல முடியுமா?" என்று சண்பகம் வினயமாகக் கூறினாள்.

ஆனால், அடுத்த இரண்டு நாட்களிலும் அவன் வெளியே போய் விட்ட பிறகு கொஞ்சம்சொஞ்சமாகக் கயிறுகளை அறுத்துவிட்டாள். அவன் படுத்தபோது கயிறுகள் அறுந்து தாழ்ந்துவிட்டன. கும்பசோசன் பெரிதும் சினம்கொண்டு சண்பகத்தைக் கண்டித்தபோதெல்லாம் அக்கம் பக்கத்துப் பிள்ளைகளின்மேல் பழிபோட்டாள். அடுத்த நாள் ஒன்றிரண்டு கயிறு தவிர மற்றக் கயிறுகளை எல்லாம் அறுத்து விட்டாள். அன்று இரவு அவன் படுத்தபோது கயிறுகள் அறுந்துவிட, அவன் தொப்பென்று கீழே விழுந்தான். அவன் கடுஞ் சினத்தோடு,