உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் 61 கும்பகோசனை அழைத்து இக்காசு வந்த விதத்தைக் கேட்கச் சொல்லும்படியும் இரகசியமாகச் சொல்லி அனுப்பினாள்.

விடுமுறை கழிந்த பிறகு அடுத்த நாள் விடியற் காலையில் கும்ப கோசன் தன் வழக்கமான தொழிலுக்குப் போய் வீடு வந்து சேர்ந்தான். சண்பகம் சமைத்த நல்ல உணவைச் சாப்பிட்ட பிறகு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தான். அப்போது ஓர் ஆள் வீட்டு வாசலில் நின்று, ‘இந்த வீட்டில் கும்பகோசன் இருக்கிறாரா?” என்று உரத்துக் கேட்டான்.

66

கும்பகோசன், “யார் அது?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து வெளியில் வந்தான். அரச சேவகன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, "நான்தானுங்க கும்பசோசன்; என்ன சங்கதியோ” என்று கேட்டான்.

சேவகன், “மாட்சிமை தங்கிய அரசர் பெருமான் உங்களை அரச சபைக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார். உடனே வரவேண்டும் என்று அரசாங்க பாஷையில் அதிகார தோரணையில் கூறினான்.

கும்பகோசனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ‘அரசர் ஏன் வரச் சொன்னார்? நான் என்ன தவறு செய்தேன்' என்று பலவாறு சிந்தித்தான். இதற்குள் சேவகன், “ஏன் நிற்கிறீர்கள் ஐயா? புறப்படுங்கள்" என்றான்.

கும்பகோசன் சேவகனுடன் புறப்பட்டுச் சென்றான். அவன் மனம், காரணம் தெரியாமல் குழம்பியது. இருவரும் அரண்மனையை அடைந்தனர். அரசர் அமர்ந்திருந்த அவைக்குக் கும்பகோசன் அழைத்துச் செல்லப்பட்டான். கும்பகோசன் ஒன்றும் தோன்றாமல், மனக் குழப்பத்துடன் அரசரை வணங்கி ஒதுங்கி நின்றான். அரசர், கும்ப கோசனை ஏற இறங்கப் பார்த்தார், பிறகு அருகிலிருந்த சேவகனை நோக்கினார். அவன் ஒரு வெள்ளித் தட்டைக் கொண்டுவந்து அரசர் முன்பு வைத்துச் சென்றான். அதில் இரண்டு பழைய பொற் காசுகள் இருந்தன. அருகில் இருந்த மந்திரி, "கும்பகோசரே இந்தப் பொற் காசுகளைச் சண்பகத்திடம் கொடுத்தீரா? இந்தக் காசுகள் உமக்கு எங்கிருந்து கிடைத்தன?” என்று கேட்டார்.

கும்பகோசன் தட்டிலிருக்கும் பொற்காசுகளைப் பார்த்தான். பிறகு, என்ன சொல்வது என்று தோன்றாமல் அங்கிருந்தவர் முகங்களை எல்லாம் பார்த்தான். கடைசியில் அவன் பார்வை அந்தச் சபா மண்டபத் தின் கோடியில் இருந்த வாயிலின் கதவருகில் நிற்கும் இரண்டு பெண்கள்மீது பதிந்தது உடனே அவன் திடுக்கிட்டு நோக்கினான்.