உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

அடையவும் இல்லை. வேரற்ற மரம்போல் கீழேவிழுந்தாள். குத்துண்ட மார்பிலிருந்து குபுகுபுவென்று சூடான சிவந்த இரத்தம் வெளிப்பாய்ந் தோடியது. உடலைவிட்டுப் பிரியும் உயிர் சிறிதுநேரம் துடிதுடித்தது. ஆனால், என்ன வியப்பு! அவள் முகத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் காணப்பட்டன. தான் சாகிறதற்காக அவள் வருத்தம் அடையவில்லை. 'பகவன் புத்தருடைய சேதியத்தைச் சிறப்புச் செய்தேன். விளக்கேற்றி வணங்கினேன்' என்னும் எண்ணம் அவளுக்கு மன அமைதியைத் தந்தது.

பிறகு சில நிமிடங்களில் அவள் உயிர் உடலை விட்டு நீங்கியது. அவள் பிணமானாள். ஆனால்...! அந்தச் சிரிப்பும் மகிழ்வும் அமைதியும் அவள் முகத்தை விட்டு நீங்கவில்லை.