உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

ஆனந்ததேரர் பெயரையும் அடிக்கடி நீ சொல்லுவதன் கருத்து என்ன?” என்று அவனைக் கேட்டார்கள். “இந்த இரகசியத்தை அரசரிடம் தவிர வேறு ஒருவருக்கும் சொல்லக்கூடாது” என்றான் குடியானவன். 'இதில் ஏதோ முக்கியமான விஷயம் இருக்கிறது போலும் என்று சேவகர் தீர்மானம் செய்து, அவனை மறுபடியும் அரசர் முன்பு கொண்டுபோய், நடந்த செய்தியைக் கூறினார்கள். அரசர், "நீ கூறியதன் கருத்து என்ன?” என்று அவனைக் கேட்டார்.

குடியானவன்அன்று காலையில் நடந்ததைக் கூறினான். தான் விடியற்காலையில் வயலுக்குச் சென்று உழுது கொண்டிருந் ததையும், அப்போது பகவன் புத்தர் ஆனந்ததேரருடன் அங்கு எழுந்தருளி வந்ததையும், அவர்கள் அங்கிருந்த பணப்பையைக் கண்டு பேசிக் கொண்டவற்றையும் விளக்கமாகக் கூறினான். கூறி “அவர்கள் பண மூட்டையை நச்சுப்பாம்பு என்று சொன்னது என் விஷயத்தில் உண்மை யாய் விட்டது. நான் பணத்தைக் களவு செய்யாதவனாக இருந்தும் இந்தப் பணம் என் உயிருக்கு நஞ்சாக இருக்கிறது” என்று சொன்னான். இதைக்கேட்ட அரசர் தமக்குள் யோசித்தார். 'இந்த ஆள், உலகத்துக்கே பெரியவர்களாக உள்ளவர்களைச் சான்று கூறுகிறான். இவனைப் பிடித்து வந்த சேவகர் கூறிய சான்றுகளோ இவன் கள்வன் என்பதைத் தெரிவிக்கின்றன. ஒரு வேளை இவன்மீது தவறாகத் திருட்டுக் குற்றம் சாற்றப்பட்டிருக்குமோ? இதைத் தீர விசாரிக்கவேண்டும்' என்று இவ்வாறு யோசித்து அரசர், குடியானவனைக் கொலை செய்யாமல் சிறையில் வைக்கும்படி கட்டளை இட்டார்.

அன்று மாலை அரசர், புத்தர் பெருமான் எழுந்தருளியிருந்த சோலைக்குச் சென்று, பகவரை வணங்கி, “பகவரே! இன்று காலையில் தாங்கள் ஒரு குடியானவன் உழுது கொண்டிருந்த வயலுக்கு எழுந்தருளினீர்களோ" என்று கேட்டார்.

“ஆமாம், அரசரே!”

66

அங்குத் தாங்கள் என்ன கண்டருளினீர்கள்?”

"பொற்காசு நிறைந்த பணப்பையையும் முத்து மாலையையும்

கண்டோம்.”

“அப்பொழுது தாங்கள் என்ன அருளிச் செய்தீர்கள்?”