உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கழற்றிய நகைகளை அவன் எதிரில் காலடியில் வைத்தாள். அவன் கால்களைத் தன் கைகளால் தொட்டுக் கும்பிட்டாள். பிறகு, கைகூப்பியபடியே அவனைச் சுற்றி வலம்வரத் தொடங் கினாள்.

66

சுருக்காக ஆகட்டும்" என்றான் அவன்.

அவன் எண்ணமும் கண்களும் நகைமீது பதிந்தன. தங்கமும் நவரத்தினங்களும் சேர்ந்த நகைக்குவியல் சூரிய வெளிச்சத்தில் பளிச்சென்று பிரகாசித்தன. அவன் கருத்து முழுவதும் அவற்றில் பதிந்துகிடந்தது. அடுத்த வினாடியில், !” என்று அலறினான். எதிரில் இருந்த பாதாளப் படுகுழியில் விழுந்தான். கடகட வென்று புரண்டுகொண்டே படுகுழியில் மறைந்துவிட்டான்.

66

அவனைச் சுற்றி வலம்வந்த பத்திரை பின்புறமாக வந்தவுடனே, மின்னல் வேகத்தில் தன் இரண்டு கைகளாலும் அவன் முதுகை ஊக்கித் தள்ளினாள். நகைகளில் தன் எண்ணத்தைப் பறிகொடுத்துத் தன்னை மறந்திருந்த அவன், அவள் ஊக்கித் தள்ளிய வேகத்தினால் பயங்கரப் படுகுழியில் விழுந்தான். குற்றமற்ற தன் மனைவியை, இளம் பெண்ணைப் படுகுழியில் தள்ளிவிட எண்ணிய அவன், தானே அப்படுகுழியில் விழுந்து மறைந்தான். அவன் கதி அதோகதியாய் விட்டது!

பயங்கரப் படுகுழியிலே 'ஓ' வென்று அலறிக்கொண்டே விழுந் ததைக் கண்ட பத்திரைக்கு மனம் பதைத்தது. அந்த இடத்திலேயே அவள் மரம்போல அசைவற்று நின்றுவிட்டாள். எவ்வளவு நேரம் அப்படி நின்றிருந்தாள் என்பது அவளுக்குத் தெரியாது. கடைசியாகத் தன்னுணர்வு வரப்பெற்றாள். மாலை வெயில்பட்டு ஒளி வீசிக் கொண்டிருக்கும் நவரத்தின நகைகள் அவளைப் பார்த்துச் சிரிப்பது போலத் தரையில் கிடந்தன. பாறைகளின் மேலே வேகமாக 'விர்விர்' என்று வீசிக் கொண்டிருக்கும் காற்றைத் தவிர வேறு ஒருவரும் அங்கு இல்லை. எங்கும் அமைதியாக இருந்தது. தன்னந்தனியே நிற்கும் அவள், தன் வாழ்க்கை நிலையைப் பற்றித் தனக்குள்ளே சிந்திக்கலானாள். கணவனைத் தான் கொலை செய்துவிட்டதாகக் கூறினால், எல்லோரும் தன்னை நிந்திப்பார்கள். 'கணவனைக் கொன்ற காதகி,' ‘புருஷனைக் கொன்ற பாதகி' என்று சுடுசொல் கூறுவார்கள். அவன், தன்னைக் கொலை செய்யத் துணிந்தான் என்று கூறினால் அதை ஒருவரும் நம்பமாட்டார்கள். 'பொய்யாக வீண்பழி சுமத்துகிறாள்” என்று