உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

103

போவதைக் கூறினாள். அம்மையார், “சரி போகட்டும். அதைப்பற்றிக் கவலைவேண்டாம். நீ போ” என்று கூறி மீண்டும் சொற்பொழிவைக் கருத்தூன்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். மிக வருத்தத்தோடு வீடு திரும்பிய வேலைக்காரி, கள்ளர்கள் வெள்ளிக்காசுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, இப்போது பொற்காசு உள்ள அறைக்குள் புகுந்து தங்க நாணயங்களை மூட்டை கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கண்டு மனம் பதறி, மறுபடியும் ஓடோடி வந்து அம்மையாரிடம் பொற்குவியல் கொள்ளை போவதைக் கூறினாள். அப்போதும் அம்மையார் அறவுரையிலே கருத்தூன்றி யிருந்தார். அவர் அவளைப் பார்த்து, "போனால் போகட்டும். இப்போது தொந்தரவு செய்யாதே” என்று கூறி முன்போலவே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஊழியப் பெண் அடிக்கடி ஓடிவந்து அம்மையாரிடம் கூறியதை யும் அம்மையார் அவளிடம் கூறியதையும் கள்ளர் தலைவன் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். மூன்று தடவை வேலைக்காரி வந்து செம்பு, வெள்ளி, பொன் நாணயக் குவியல்கள் கொள்ளை போவதைக் கூறியபோதும், அம்மையார் அதனைப் பொருட்படுத்தாமல், அறவுரை யில் கருத்தூன்றியிருந்ததைக் கண்டு அவனுக்கு வியப்பு உண்டா யிற்று. அம்மையார் மீது அவனுக்குப் பெருமதிப்பு உண்டாயிற்று. அவன் உள்ளத்திலே நல்லறிவு தோன்றியது. 'இவ்வளவு நல்லவருடைய பொருளைக் கொள்ளையடித்தால் என் தலை மேலே இடிவிழும்! இவர் பொருளைத் தொடுவது பெரும் பாவம்!' என்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான். உடனே, அவன் அவ்விடத்தைவிட்டு விரைந்து நடந்தான். அம்மையார் வீட்டை யடைந்தான். கள்ளர்கள் அப்போது, கொள்ளை யடித்த பொருள்களை மூட்டை கட்டி, அவற்றை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். மூட்டை களை இறக்கி வீட்டிற்குள்ளேயே வைத்துவிடும்படி அவன் அவர்களுக்குச் சொன்னான். அதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். ஆனால், ஒன்றும் பேசாமல் தம் தலைவன் கட்டளைப்படியே மூட்டைகளை வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தார்கள். மூட்டைகளை இறக்கியானவுடன் அவர்களை அழைத்துக்கொண்டு அம்மையார் இருந்த கூட்டத்திற்கு வந்தான். வந்து ஒருபுறமாக அமர்ந்து அறவுரைகளைக் கேட்டான்.

சொற்பொழிவு முடிந்தது. எல்லோரும் எழுந்து சென்றனர். காத்தி யானி அம்மையாரும் தமது இல்லத்திற்குப் புறப்பட்டார். கள்ளர் தலைவன், அம்மையார் எதிரில் சென்று அவரை வணங்கிக் கும்பிட்டான். தான்