உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

எனக்குப் பெருமையோ புகழோ இல்லை. அவனிடம் நான் தோல்வியடைந்தால் - அந்த வெட்கக் கேட்டைவிடப் போட்டிக்குப் போகாமல் காட்டுக்குப் போய் உயிர் விடுவதே மேலானது.' இவ்வாறு தமக்குள் எண்ணியக் குட்டிலப் புலவர் வீட்டைவிட்டுத் காட்டுக்குப் போனார். போனவர் சாவதற்கு அஞ்சி வீட்டுக்குத் திரும்பி வந்தார். வீட்டுக்கு வந்தவர் மானத்துக்கு அஞ்சிக் காட்டுக்குப் போனார். போனவர், சாவதற்கு அஞ்சி மீண்டும் வீட்டுக்கு வந்தார். இவ்வாறு காட்டுக்குப் போவதும் வீட்டுக்கு வருவதுமாக ஆறு நாட்கள் கழிந்தன.

தேவலோகத்தில் சக்கரன் (இந்திரன்) தன்னுடைய சிம்மாசனத் தில் வெண்மையான பாண்டு கம்பளத்தின் மேல் அமர்ந்திருந்தான். அப்போது அந்தக் கம்பளம் சூடு கொண்டது. பூலோகத்தில் ஏதேனும் சிறப்பான நிகழ்ச்சிகள் நடக்கும்போது இந்திரனுடைய பாண்டு கம்பளம் சூடு கொள்வது வழக்கம். கம்பளம் சூடுகொண்ட காரணத்தை யறிந்த சக்கரன், குட்டிலப் புலவர் மனவருத்தத்துடன் காட்டில் இருப்பதை அறிந்து அவரிம் மனித உருவங் கொண்டுவந்தான். வந்து, “கலைவாணரே! ஏன் இந்தக் காட்டுக்கு வந்தீர்?” என்று வினவினான். க கலைவாணர்: “நீர் யார் ஐயா!”

66

"நான் சக்கரன், இந்திரன்.

6

“தேவர் கோமானே! இசைப்போட்டியில் என்னுடைய மாணவனிடம் தோல்வியடைவேன் என்று அஞ்சுகிறேன். தோல்வியடைந்து மானம் இழந்து வாழ்வதைவிட செத்துப் போவது சாலச் சிறந்ததென்று கருதுகிறேன். யாழ் நரம்புகளை இசைத்து இனிமையான பண் உண்டாக்க நான் அவனுக்குக் கற்பித்தேன். இப்போது அவன் தன்னுடைய ஆசிரியனையே வெல்வதற்குப் போட்டியிடுகிறான். தேவர் கோமானே! தாங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்."

இது கேட்ட சக்கரன் கூறினார்: "இசைவாணரே! அஞ்சாதீர். நான் உமக்குப் புகலிடமாகவும் பாதுகாவலனாகவும் இருப்பேன். உற்ற வேளையில் உமக்கு உதவிசெய்து உம்முடைய இசைப் புலமையை வெளிப்படுத்துவேன். உம்முடைய மாணவனைவிட நீர் இசைக் கலையில் வல்லவர் என்பதில் சந்தேகமில்லை. உம்முடைய மாணவனுக்கு நீர் அஞ்சாதீர்.

وو