உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

பாடலோ டியைந்த ஆடல் பண்ணமை கருவி மூன்றும் கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த மூற ஓடரி நெடுங்கண் அம்பால் உளங்கிழிந் துருவ எய்யா வீடமை பசும்பொற் சாந்தம் இலயமா ஆடு கின்றாள்

(சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 91)

139

இவ்வாறு தேசிகப் பாவை அரங்கத்தில் ஆடும்போது புதியவனாக வந்திருக்கும் சீவககுமரன்மேல் அவளுடைய பார்வை சென்றது. இளமையும் வனப்பும் மிடுக்குமுடைய அரசகுமரனின் தோற்றம். அவ ளுடைய மனத்தை ஈர்த்தது. நாட்டியம் ஆடிக் கொண்டே அவளுடைய பார்வையை அவள் அடிக்கடி அவன் மேல் செலுத்தினாள். சீவக குமரனும் கலைகளில் வல்லவன். அவனும் அவளுடைய ஆடலிலும் பாடலிலும் அழகிலும் ஈடுபட்டு அவளை நோக்கினான்

வாணுதல் பட்டம் மின்ன வார்குழை திருவில் வீசப் பூண்முலைப் பிறழப் பொற்றோடு இடவயின் நுடங்க ஓல்கி மாணிழை வளைக்கை தம்மால் வட்டணை போக்குகின்றாள் காண்வரு குவளைக் கண்ணால் காளைமேல் நோக்கினாளே (சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 92)

தேசிகப் பாவை சீவக குமரனைக் காதலித்தாள், அவனை அல்லாமல் வேறு ஒருவரையும் விரும்புவதில்லை என்று உறுதி செய்துகொண்டாள்.

இவனையல்லாமல் வேறு ஒருவரையும் விரும்பேன். 'கணிக்கை மகளுக்குப் பொன்னைக் கொடுத்தால் கற்பை விற்றுவிடுவாள் என்று கூறுவார்கள். அந்தச் சொல் என்னிடத்தில் பொய்யாகும்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

கன்னிமை கனிந்து முற்றிக் காமுறக் கமழுங் காமத்து

இன்னறுங் கனியைத் துய்ப்பான் ஏந்தலே; பிறர்கள் இல்லை. பொன்னினால் உடையும் கற்பென்று உரைத்தவர் பொய்யைச் சொன்னார்

இன்னிசை இவற்கல்லால் என் நெஞ்சிடம் இல்லை என்றாள் (சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 95)

தேசிகப் பாவையும் சீவக குமரனும் ஒருவரையொருவர் விரும்பினார்கள். ஆனால் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்