உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அனந்த வீரியனின் திருமணம்

முன்னொரு காலத்திலே பாரத தேசத்தில் வச்சாவதி நாட்டை அபராஜிதன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அபராஜித னுடைய தம்பியான அநந்த வீரியன் இளவரசனாக இருந்தான். தமயனும் தம்பியுமான இவர்கள் தலைநகரமான பிரபங்கர நகரத்தில் அரண்மனையில் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்தவர்கள். இசை நடனக் கலைகளைக் கற்றவர்கள் கலை ரசிகர்கள்.

இவர்களுடைய அரண்மனையில் நாடக அரங்கத்தில் பர்பரை, சிலாதிகை என்னும் இரண்டு நாட்டியப் பெண்கள் நடனம் ஆடி வந்தனர். அவர்களுடைய நடனத்தை அபராஜிதனும், அனந்த வீரியனும், அரண்மனையிலிருந்தவர்களும் கண்டு மகிழ்ந்தனர்.

வழக்கம்போல ஒரு நாள் அரண்மனையில் நடனக் கச்சேரி நடந்தது. யாழும் பாட்டும் இசைத்தன. முழவும் தாளமும் ஒலித்தன. நடனத்தில் சிலம்பொலி அதிர்ந்தது. பர்பரையும் சிலாதிகையும் ஆடின நடனம் அபராஜிதனையும், அனந்த வீரியனையும் கவர்ந்தன. அவர்கள் நடனக் கலையில் ஈடுபட்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

வந்தார்.

இந்தச் சமயத்தில் இசை நாடகக் கலைஞரான நாரதர் அங்கு

நடனக் கலையில் ஈடுபட்டு அதிலேயே மனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த அபராஜிதனும் அனந்த வீரியனும் நாரதர் வந்ததைக் கவனிக்கவில்லை. ஆகவே, அவரை வரவேற்று உபசரிக்கவில்லை.

அதனால் நாரதர் அவர்கள் மேல் சினங்கொண்டார். அவர்கள் தன்னை மதிக்கவில்லை என்று அவர்கள் மேல் சீற்றங்கொண்டார் இவர்களுக்கு இவ்வளவு இறுமாப்பா, இவர்களுடைய இறமாப்பை அடக்குகிறேன் பார் என்று கறுவிக்கொண்டே அவ்விடத்தைவிட்டு அகன்றார்.