உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

149

அரச குமாரிகள் தாங்கள் காதலிக்கும் அரசகுமாரரைத் திருமணஞ் செய்துகொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. கனகஸ்ரீ, இளவரசன் அனந்த குமரனைத் திருமணஞ் செய்து கொள்ள விரும்பினாள். தன்னுடைய பிரபங்கர நகரத்துக்கு அவளை அழைத்துக்கொண்டுபோய் அங்கு அரச மரியாதையுடன் அவளைத் திருமணஞ் செய்து கொள்வதாகக் கூறினான்.

பிறகு அவள் உண்மையாக நடந்தவைகளை அறிந்தாள். தன்னுடைய தந்தை தமிதாரி அரசன் நர்த்தகிகளை அனுப்பும் படி திருமுகக் கடிதம் எழுதியதும், அபராஜிதனும் அனந்த வீரியனும் நர்த்தகியர் வேடம் பூண்டு வந்ததும், தன்னை அனந்த வீரியன் திருமணம் செய்வதற்காகவே இவ்வாறு மாறுவேடம் பூண்டு வந்ததும், எல்லாவற்றையும் அவள் அறிந்தாள். இந்த நிலையில் தான் அனந்த வீரியனை மணஞ்செய்து கொள்வதாகத் தன் தந்தையிடம் கூறினால், விபரீதமாக முடியும். தமதாரி அரசன் அனந்த வீரியனையும் அபராஜிதனையும் சிறைப்படித்து வைப்பான். திருமணமும்

நடைபெறாமற் போகும். இதற்குச் செய்ய வேண்டிய தென்ன?

விஷயத்தை வெளியிட்டால், அவளும் அனந்த வீரியன் அபராஜிதனுடன் புறப்பட்டுப் பிரங்க நகரத்துக்குப் போக வேண்டும். போன பிறகு அவளை அரசவைபவத்துடன் அனந்த வீரியன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் செய்த தீர்மானத்துக்கு அவள் உடன் பட்டாள். எல்லாம் சுமுகமாக நடைபெற வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை. இந்த முடிவுப்படியே அவர்கள் ஒருநாள் விடியற் காலையில் புறப்பட்டு நகரத்தை விட்டுச் சென்றார்கள். 'நடிகை'யரும் அவர்களுடைய பரிவாரக் குழுவும் இளவரசியும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

கன்னிமாடத்தில் அரச குமாரத்தியானவள் காணாமற் போனதும் அவளுக்கு நடனங் கற்பித்த நர்த்தகிகளும் அவர்களுடன் வந்திருந்த பரிவாரங்களும் காணப்படாததும் பொழுது விடிந்து வெகுநேரஞ் சென்ற பிறகுதான் கன்னிமாடத்து ஊழியப் பெண்களுக்குத் தெரிந்தன. இந்செய்தியை ஊழியப் பெண்கள் அரசனுக்குத் தெரிவித்தார்கள்.

அரசன், இதில் ஏதோ சூது இருக்கிறது என்று எண்ணிச் சினங் கொண்டு, அவர்களைப் பிடித்துக்கொண்டு வரும்படி தன்னுடைய