உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

எல்லோரையும் கிறீதத்தச் சீமான் வரவேற்று அவரவர் இருக்கையில் அமரச் செய்கிறார். இசைப் போட்டி அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

மண்ணிடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார் ஒண்ணிற வுரோணி ஊர்ந்த ஒளிமதி ஒண்பொ னாட்சித் தெண்ணிற விசும்பின் நின்ற தெளிமதி முகத்து நங்கை கண்ணிய வீணை வாட்போர்க் கலாமின்று காண்டும் என்றே.

இதோ மணமகள் காந்தருவதத்தை வருகிறாள். மகளிர் சிலர் நிறைகுடம், விளக்கு, கண்ணாடி, சாமரை, கொடி, பூ முதலான எட்டு வகை மங்கலப் பொருள்களை ஏந்திக்கொண்டு முன்னே வருகின்றனர். ஒருத்தி வெள்ளித்தட்டில் பொன்னரி மாலையை ஏந்திக் கொண்டு வருகிறாள். இப்பொன்னரிமாலை, இசைப் போட்டியில் வென்ற ஆடவனுக்கு மணமகள் சூட்டுவதற்காகும். சில மகளிர் சில யாழ்களை ஏந்தி வருகின்றனர். இசைப் போட்டியில் கலந்துகொள்பவர் இக்கருவிகளை வாசித்து இசை பாட வேண்டும்.

வென்றவன் அகலம் பூட்ட விளங்கொளி மணி செய்திருப்பின் நின்றெரி பசும்பொன் மாலை போந்தது நெறியிற் பின்னர் ஒன்றிய மணிசெய் நல்யாழ் போந்தன உருவமாலை தின்றுதேன் இசைகள் பாடத் திருநகர் சுடர அன்றே.

ஏவல் மகளிரைத் தொடர்ந்து காவற் பெண்கள் பலர் வருகிறார்கள். இவர்களுடைய முதுகுப் புறத்தில் அம்பறாத் துணியும் இ து கையில் வில்லும் வலது கையில் அம்பும் காணப்படுகின்றன. இவர்களுக்கு மத்தியில், மணமகள் காந்தருவதத்தை தன்னுடைய தோழியர்களோடு வருகிறாள். இவளைப் பின் தொடர்ந்து மற்றும் சில காவற் பெண்கள் வருகின்றனர். இவர்கள் கையில் கேடயமும் வாளும் வேலும் ஏந்தியுள்ளனர்.

இவ்வாறு ஏவல் மகளிரும் காவற் பெண்களும் உடன்வர காந்தருவதத்தை இசையரங்கத்தை யடைந்து மேடைக்கு வருகிறாள். எல்லோருடைய பார்வையும் மணமகள் பார்வையும் மணமகள் மேல் செல்கின்றன. அவளுடைய உருவம், இளமை, வனப்பு முதலியவற்றைக் கண்டு வியக்கின்றனர்.