உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

குணவதி சொல்லியவை அரசியின் மனத்தை மாற்ற வில்லை. குணவதி மீண்டும்மீண்டும் கூறிய அந்த அருவறுக்கத் தக்க விகார உருவத்தை அவள் சிந்திக்கவில்லை. இராணியின் மனம் மாறாதத பற்றிக் குணவதி வியப்படைந்தாள். இராணிதன் எண்ணத்தை நிறை வேற்றிக்கொண்டாள். அவள் அந்த ‘அழகனோடு' கூடாவொழுக்கங் கொண்டாள். அது அவளுடைய ஊழ்வினை போலும். விதியின் திருவிளையாடல் என்பது அல்லாமல் வேறு என்ன சொல்வது!

இவனுடைய இசைப் பாட்டைக் கேட்பதற்கு முன்பு இராணி இவனைக் கண்டிருந்தால் இவனை விரும்பியிருப்பாளா? இவனுடைய இசைப்பாட்டு அல்லவா இவளை இவனிடம் இச்சை கொள்ளச் செய்தது? என்னே விபரீதம் இது' என்று குணவதி தனக்குள்ளே எண்ணிக் கொண்டாள்.