உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கொடுத்தனுப்பினாள். உண்மையில், அவனை பாம்பு கடித்தது என்பது வெறும் கற்பனையே. அந்த மோதிரத்தைக் கொண்டுபோய்ச் சிறைச் சாலைக் காவல்காரனிடம் காட்டி சிறையிலிருக்கும் மாளவியை விடுவிப்பதற்காகச் செய்த சூழ்ச்சி இது.

விதூஷகன் அரசியின் நாகமுத்திரையுள்ள மோதிரத்தைக் கொண்டுபோய் சிறைச்சாலைக் காவலனிடம் காட்டி, மாளவியை இராணி விடுதலை செய்து அழைத்து வரச் சொன்னார் என்று கூறினான். இராணியின் நாகமுத்திரை மோதிரத்தைக் கண்ட காவல்காரன் மாளவியைச் சிறையிலிருந்து விடுவித்தான்.

அக்கினி மித்திர அரசன் மாளவியைப் பூங்காவில் சந்தித்து அவளுடன் உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வமயம் இளைய இராணி ஐராவதி தோழியுடன் பூஞ் சோலைக்கு வந்தாள் வந்தவள் அரசனும் மாளவியும் காதலில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு சினங்கொண்டாள். அவள் தன் தோழியை அனுப்பி இந்தச் செய்தியை மூத்த இராணிக்குத் தெரிவித்தாள். மூத்த இராணி தாரணி அவ்விடம் வந்து அரசனும் மாளவியும் தனித்திருப்பதைக் கண்டு சினந்தாள். அவர்களை அவள் வைதாள். ஒரு பணிப் பெண்ணிடத்தில் அரசன் இவ்வாறு காதல்கொள்வது அரசிகளுக்கு வெட்க மாகவும் இழிவாகவும் தோன்றிற்று. இதை நாட்டு மக்கள் அறிந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்! இராணிக்குத் தன்னுடைய பணிப்பெண்ணாகிய மாளவியின் மேல் பெருங் கோபம் உண்டாயிற்று.

இந்தச் சமயத்தில் விதர்ப்ப தேசத்து அரசன் அக்கினி மித்திரனுக்குக் காணிக்கையாக விலையுயர்ந்த பொருள்களைத் தூதரிடம் கொடுத்து அனுப்பினான். அந்தத் தூதர்களுடன் இரண்டு பணிப் பெண்களும் வந்திருந்தார்கள். தூதர்களும் அவர்களுடன் வந்த பணிப்பெண்களும் தாங்கள் கொண்டு வந்த காணிக்கையை அரசனுக்கு அளித்தார்கள். அவ்வமயம் அங்கிருந்த மாளவியைப் பணிப் பெண்கள் கண்டு மகிழ்ச்சியோடு "ஓகோ! எங்கள் அரசகுமாரி” என்று சொல்லிக் கொண்டு அவளருகில் வந்து அவளை வணங்கினார்கள்.

இதைக் கண்டபோது, அரசனுக்கும் அரசிகளுக்கும் மற்றவர்களுக்கும் பெருவியப்பு உண்டாயிற்று. இதுபற்றித் தூதர்களைக் கேட்டபோது அவர்கள் ‘மாளவி' உண்மையில் விதர்ப்ப தேசத்து அரச குடும்பத்தில் பிறந்தவளென்றும் அவர் சில காலம் ஊழியப் பெண்ணாக