உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

"நான் உச்சயினி நகரத்தில் இருப்பவன், இசை பாடுவதும் யாழ் வாசிப்பதும் என்னுடைய குலத்தொழில். என்னுடைய உறவினர் இந்தக் கேசம்பி நாட்டில் வாழ்கிறபடியால் அவர்களைக் காண்பதற்காக இங்கு வந்தேன். வருகிற வழியில் பெரியபெரிய காட்டைக் கடந்து வர வேண்டியிருந்தது. அந்தக் காட்டில் யானைகள் கூட்டமாக நீர் அருந்திக் கொண்டிருந்ததைக் கண்டு அஞ்சி அந்த யானைகள் போகும் வரையில் ஒரு மரத்தின் மேல் ஏறி மறைந்திருந்தேன். யானைகள் நீரைக் குடித்துவிட்டுப் போய்விட்டன. பிறகு நான் மரத்தை விட்டு இறங்கும்போது பக்கத்திலிருந்த மூங்கில் புதரில் இந்த யாழ் சிக்கித் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். கண்டு இதை எடுத்துக்கொண்டு வந்து அறுந்துபோன நரம்புகளைச் செப்பஞ் செய்து இதை வாசித்தேன். இதிலிருந்து இனிமையான நாதம் வருவதைக் கண்டு மனமகிழ்ந்தேன்”

இவ்வாறு இசைவாணன் தான் யாழைக் கண்டெடுத்த வரலாற்றைக் கூறினான்.

உதயணன் தன்னுடைய கோடபதி யாழை மீண்டும் கண்டது பற்றிப் பெரு மகிழ்ச்சியடைந்தான். “நீர் உம்முடைய ஊருக்கு போக வேண்டியதில்லை. இங்கே வாழலாம். உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நான் அமைத்துத் தருகிறேன்” என்று இசைவாணனுக்குக் கூறி அவனுக்கு வீடும் மனையும்அமைத்துக் கொடுத்து அவன் மன மகிழும்படி பொன்னையும் பொருளையும் வழங்கினான். அவனிட மிருந்து தன்னுடைய கோடபதி யாழை வாங்கி அதற்குத் தங்கப் பூண் கட்டி அழகுற அமைத்து அதை முன்போல் நாள்தோறும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருந்தான். மீண்டும் யாழ் கிடைத்தது தனக்குப் பெரும் பேறாகக் கருதினான். நாள்தோறும் அரண்மனையில் கோடபதி யாழோசை இனிமை யாக இசைத்துக்கொண்டிருந்தது.