உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

'அழுது புலம்பினாலும் சென்றது திரும்பிவராது என்பதை அறிந்தும், அறிவுள்ளவன் எதற்காக அழுது புலம்பவேண்டும்?"

"இளையவரும் முதியவரும் பாமரரும் பண்டிதரும் ஏழையும் செல்வரும் எல்லோரும் மறைய வேண்டியவர்களே!'

66

‘பழுத்த பழங்கள் மரத்திருந்து உதிர்வதுபோல மனிதரும் இறக்க வேண்டியவர்களே!'

"காலையில் இருந்தவர் மாலையில் இல்லை. மாலையில் இருந்தவர் காலையில் இல்லை. இவ்வாறு நிலையற்றது மனித வாழ்க்கை.

“பாமரர்கள் அழுது புலம்புவதனால், இறந்தவரை மீட்கக் கூடும் என்றால், அறிஞர்களும் அழுது புலம்பி இறந்தவரை எழுப்பலாம். ஆனால், அழுவதும் துன்புறுவதும் உடம்பை வாட்டி இளைக்கச் செய்கிறதே தவிர இறந்தவரை எழுப்ப உதவுவதில்லை.'

66

وو

‘தீப்பற்றி எரிகிற வீட்டை நீரைக்கொட்டி அவிப்பது போல, கற்றறிந்த நல்லறிஞர்கள், காற்றிலே பஞ்சு பறப்பது போலத் தங்கள் துன்பங்களைப் பறக்கவிட்டு, துன்பத்தைத் தணித்துக் கொள்கிறார்கள்."

"இறப்பதும் பிறப்பதும் இயற்கை. நூல்களைப் படித்து, இம்மை மறுமைகளின் இயல்பை ஆழ்ந்து உணர்ந்த அறிஞர்கள், எவ்வளவு பெரிய துன்பம் நேரிட்டாலும் அதனை மனத்தில் கொண்டு துன்பப் படமாட்டார்கள்.”

சென்றவர்களுக்காக வருத்தம் அடையாமல், இருக்கிற உற்றார் உறவினரைப் போற்றிக் காப்பாற்றுவது நமது கடமை. இதுவே அறிவாளியின் செயல்.'

இவ்வாறு இராமன் நிலையாமையின் இயல்பையும், இருக்கிறவர் செய்ய வேண்டிய கடமையையும் விளக்கிக் கூறினார். இதைக்கேட்ட எல்லோரும் துன்பம் நீங்கி மன அமைதியடைந்தார்கள்.

பிறகு, பரதன் இராமரை வணங்கி வாரணாசி நாட்டுக்கு வந்து அரசாட்சியை ஏற்றுக்கொள்ளும்படி இராம பண்டிதரை அழைத்தார். அப்போது இராமர் கூறினார்: "தம்பி! சீதையையும் இலக்கணனையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு போ. போய் நீயே நாட்டை அரசாட்சி செய்” “இல்லை. தாங்கள்தான் அரசாளவேண்டும்.” “பரத! பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்து அரசாட்சியை ஏற்றுக் கொள்ளும்படி