உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

எடுத்து உண்ணமாட்டார். இவர் என் கணவனாக இருக்கத் தகுதியுள்ளவர் அல்லர்' என்று தமக்குள் எண்ணினார். பிறகு, வெளிப்படையாக, “அரசர் பெருமானே! தாங்கள் இந்த அருவருப்புள்ள உணவை உண்ணலாமா?” என்றுகேட்டார்: “நீ தவறாக நினைக்கிறாய். துறவிக்கு மனிதர் கொடுக்கும் பிச்சையும் நாய் கொடுக்கும் பிச்சையும் ஒன்றுதான்” என்று கூறினார். அரசிக்குத் தன்மேல் வெறுப்பு ஏற்பட வேண்டும் என் பதற்காகவே அவர் இவ்வாறு செய்தார்.ஆனால், அரசியார் அவ ரைவிட்டுப் பிரிவதாகத் தெரியவில்லை. பல ஊர்களுக்கு நெடுந் தூரம் சென்றபிறகும் அரசியார் அவரைவிட்டுப் போகவில்லை.

கடைசியாக, சாலையின் ஓரத்தில் முளைத்திருந்த முஞ்சம் புல்லைக்கண்டு, ஒரு இலையைக் கிள்ளி, அரசியாருக்குக்காட்டி அதை இரண்டாகப் பிய்த்தார். “இதோ பார். இந்தப் புல் இலைகள் மறுபடியும் ஒன்றாகச் சேராது. நம்முடைய உறவும் இப்படித்தான் என்று கூறினார். இதைக்கேட்ட அரசியார் துக்கத்தினால் மயங்கிக் கீழே விழுந்தார். அவர் மயங்கிக் கிடப்பதை அறிந்து, துறவியார் இதுதான் சமயம் என்று விரைவாகக் காட்டுக்குள் நுழைந்து மறைந்து விட்டார். அமைச்சர்கள் அரசியாருக்கு சிகிச்சைகள் செய்தனர். நெடுநேரத்திற்குப் பிறகு, மயக்கந்தெளிந்து எழுந்து அரசியார், “அவர் எங்கே?” என்று கேட்டார். “அவர் போய்விட்டார்” என்று கூறினார்கள். அவரைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி பல திசையிலும் ஆட்களை அனுப்பினார்கள். அரசர் எங்கும் காணப்படவில்லை. இமயமலைச் சாரலுக்குப் போய் விட்டார்.

அவர்

பகவன் புத்தர், இந்தக் கதையைக் கூறியபிறகு அப்பிறப்பிலும் இப்பிறப்பிலும் உள்ள ஒப்புமைகளைக் கூறினார். அப்பிறப்பில், மணிமேகலை என்னும் கடல் தெய்வமாக இருந்தவர் உப்பல வன்னை. நாரதராக இருந்தவர் சாரிபுத்தர், மகா ஜனகராக இருந்தவர் மொக்கல் லானர், சீவாலியாக இருந்தவர் இராகுலனுடைய தாயார், தீகாவு அரச குமாரனாக இருந்தவர் இராகுல குமாரன், மகாஜனக அரசனாக இருந்தவர் நான்தான் என்று பகவன் புத்தர் விளக்கினார்.

1

அடிக்குறிப்புகள்

பிரத்தியேக புத்தர் என்பவர் புத்தஞானம் பெற்ற துறவிகள். இவர்கள் புத்தரைப் போலத் தர்மோபதேசம் செய்வது இல்லை. ஆனால், நிர்வாண மோக்ஷம் அடையும் தகுதி வாய்ந்தவர்கள்.