உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

பெருமானுடைய உள்ளங்கையில் மெல்ல வைத்தார். கொடை வள்ள லாகிய சிவி அரசர், தமது இடது கண்ணினாலே தமது கையில் இருக்கிற வலது விழியைப் பார்த்தார். தமது கண் குழியில் உள்ள வலியை வெளிக் காட்டாமல் அடக்கிக்கொண்டு, “பிராமணரே! இங்கே வாரும் என்று அழைத்தார். பிராமணன் அருகில் வந்து நின்றான்.

"இதோ,இந்த விழியைப் பெற்றுக்கொள்ளும். இந்த ஊனக் கண்ணைவிட எல்லாவற்றையும் அறிகிற ஞானக்கண் நூறு மடங்கு மேலானது” ஏன்? ஆயிரம் மடங்கு மேலானது என்று கூறி, தமது விழியைப் பிராமணன் கையில் கொடுத்தார். பிராமணன் அதனைத் தன் கையில் வாங்கித் தனது குருட்டுக் கண்ணில் பதியவைத்தான். அவ்விழி, எல்லோரும் வியக்கத்தக்கபடி, அவனுடைய கண்ணில் பதிந்து நீலத் தாமரை பூத்ததுபோல அழகாக விளங்கிற்று.

அரசர் பெருமான், தமது இடது கண்ணினாலே பிராமண னுடைய முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார், தமது மற்றக் கண்ணையும் வெளியே எடுக்கும்படி சீவகனுக்குக் கட்டளை யிட்டார். சீவகரும் அப்படியே அரசருடைய மற்றொரு விழியையும் வெளியே எடுத்தார். அரசர் அந்த விழியையும் பிராமணனுக்குத் தானம் வழங்கினார். பிராமணனாக வந்த சக்கன் இந்த விழியையும் தனது கையினால் வாங்கித்தன் கண்ணில் பதிய வைத்தார். தெய்வீகச் சக்தியினாலே, பிராமணனுடைய கண்கள் பார்வை பெற்றன. சிவி மன்னர் பார்வை இழந்து குருடர் ஆனார்.

சில நாட்களில், அரசருடைய கண்களில் வலியும் நோவும் நீங்கி விட்டன. கண் குழியில் தசை வளர்ந்தது. அப்போது அரசர் தமக்குள் எண்ணினார், 'குருடனுக்கு அரசாட்சி ஏன்? நாட்டைவிட்டுக் காட்டுக்குச் சென்று தவம் செய்வது சிறந்தது.' இவ்வாறு எண்ணிய அரசர் அமைச்சரை அழைத்துத் தமது கருத்தைக் கூறி, ஒரு ஆள் மட்டும் தமக்குப் பணிவிடை செய்யத் தம்முடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிறகு, காட்டிற்குப் போகத் தேரைக் கொண்டுவரக் கட்டளையிட்டார்.அமைச்சர், தேரில் போகவேண்டாம் என்று தடுத்துப் பொற்சிவிகை கொண்டுவரச் சொல்லி அதில் அரசரை அமரச் செய்து பரி வாரங்கள் சூழ அரசரைக் காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். சென்று, இயற்கை அழகும் தங்கி இருக்கத் தகுதியும் ஆன ஒரு ஏரியின் அருகிலே அரசரை விட்டார்கள். பணிவிடை செய்ய ஒரு