உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். குளித்து முழுகி நறுமணங் களையும் வாசனைத் தைலங்களையும் தேய்த்து, நல்லாடைகள் அணிந்து, பலவகையான சுவையுள்ள உணவுகளையும், இனிப்புகளை யும் அருந்தி மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

அக்காலத்தில் உச்சையினி நகரத்திலே மூசிலன் என்னும் பெயருள்ள இசைவாணன் இருந்தான். அவனை வணிகர்கள் அழைத்துப் பொருள் கொடுத்து இசையரங்கு நடத்தினார்கள். மூசிலன், யாழ் என்னும் இசைக் கருவி வாசிப்பவன். அவன் இசையரங்கில் அமர்ந்து தனது யாழை உச்சநிலையில் நிறுத்தி வாசித்தான். வாரணாசியிலே குட்டிலப் புலவ னுடைய இன்னிசையைக் கேட்டவர்களாகையினாலே, வணிகர் களுக்கு மூசிலனுடைய இசை இனிமையாக இல்லை. பாயைக் கீறுவது போல இருந்தது. ஆகவே ஒருவரும் இவனுடைய இசையை ரசித்து மகிழவில்லை. தன்னுடைய இசையை அவர்கள் ரசிக்காததைக் கண்ட மூசிலன், 'அதி உச்சத்தில் இசைக்கிறது போலும்; சற்றுச் சுருதியைக் குறைப்போம்' என்று எண்ணி நடுத்தரத்தில் அமைத்து வாசித்தான். அப்போதும் அவர்களின் மனத்தை அவனது இசை கவரவில்லை. அப்போது அவன், 'இவர்கள் இசையைச் சுவைக்க அறியாதவர் போலும்’ என்று தனக்குள் எண்ணி நரம்புகளைத் தளர்த்தி வாசித்தான். அப் போதும் அவன் வாசித்த இசை அவர்களின் மனத்தைக் கவரவில்லை. கடைசியில், “ஐயா. என்னுடைய இசை உங்களுக்கு ஏன் மகிழ்ச்சி யளிக்கவில்லை?” என்று கேட்டான்.

66

6

'என்ன? நீர் இசை வாசித்தீர்? நரம்பைச் சுருதி கூட்டுகிறீர் என்றுதானே எண்ணினோம்” என்று அவர்கள் விடையளித் தார்கள்.

“என் வித்தையை யறிய உங்களுக்கு இசைஞானம் போதாது போலத் தோன்றுகிறது. இதைவிட இனிமையான இசையை எங்கேனும் கேட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டான் மூசிலன்.

66

"நாங்கள் காசி மாநகரத்திலே குட்டிலப் புலவனின் இன் னிசையைக் கேட்டிருக்கிறோம். நீர் வாசிக்கும் இசை, குழந்தையின் அழுகையை நிறுத்தப் பெண்பிள்ளை பாடும் பாட்டுபோல இருக்கிறது" என்று கூறினார்கள் வணிகர்கள்.

66

'அப்படியா! இதோ உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் காசிக்குப் போகும்போது என்னையும் அழைத்துக்கொண்டு போங்கள்” என்று மூசிலன் அவர்களைக் கேட்டுக்கொண்டான்.

6