உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

114

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 11

முதல் இரண்டு இசைவாணரும் யாழை இசைவாணரும் யாழை வாசித்தார்கள். இருவரும் ஒரே இசையை இசைத்தனர். மண்டபத்திலிருந்த மக்கள் இன்பம் அடைந்து கைகொட்டி மகிழ்ந்தார்கள். சக்கன் உயரத்திருந்து, ஒரு நரம்பை அறுத்து விடு” என்று போதி சத்துவருக்குக் கூறினான். போதி சத்துவர் யாழின் வண்டு நரம்பை அறுத்துவிட்டார். நரம்பு அறுந்த போதிலும் யாழிலிருந்து இனிய இசை உண்டாயிற்று. அது தெய்வீகமான இன்னிசையாக இருந்தது. மூசிலனும் தன்னுடைய யாழில் ஒரு நரம்பை அறுத்துவிட்டான். அப்போது அதிலிருந்து இனிய சை உண்டாக வில்லை. அவனுடைய ஆசிரியரோ இரண்டாவது, மூன்றாவது நரம்புகளையும் அறுத்து வாசித்தார். இவ்வாறு ஏழுநரம்பு களையும் அறுத்துவிட்டார். கடைசியில் யாழின் சட்டத்தை வாசித்து இசை எழுப்பினார். அவர் வாசித்த இசைப்பண் அரங்கம் முழுவதும் சூழ்ந்தது. பிறகு, அரங்கைக்கடந்து நகரம் முழுவதும் பரவிற்று. இசைப் பண்ணைக் கேட்ட மக்கள் மனமுருகி மகிழ்ந்தனர். மகிழ்ச்சி தாங்காமல் தமது மேலாடையை உயர வீசி எறிந்து கைகொட்டி ஆரவாரம் செய்தார்கள்.

போதிசத்துவர் ஒரு பகடையை உயர வீசி எறிந்தார். அப்போது முந்நூறு அரம்பையர் இறங்கி வந்து நடனம் புரிந்தனர். இரண்டாவது, மூன்றாவது பகடைகளையும் எறிந்த போது, தொள்ளாயிரம் தேவலோக மங்கையர் அரங்கத்தில் வந்து நடனம் செய்தார்கள். அப்போது அரசர் பெருமான் குறிப்பாக ஒரு சைகை காட்டினார். அதைக்கண்ட கூட்டத்தினர் எழுந்து, “நீ உன் ஆசிரியருக்கு மாறாகக் கிளம்பி தவறு செய்தாய். உன் நிலையை நீ உணரவில்லை” என்று கூறி மூசிலனை வைதார்கள். அவர்கள் கல்லையும், கட்டையையும் கையில் கிடைத்த பொருள்களையும் எடுத்து அவனை அடித்துப் புடைத்துக் கொன்றார் கள். கடைசியில் காலைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் குப்பை மேட்டில் போட்டார்கள்.

அரசர் பெருமான் மகிழ்ச்சியடைந்து போதிசத்துவருக்குப் பரிசுகளை வழங்கினார். நகர மக்களும் அவருக்குப் பரிசுகளை வழங் கினார்கள். சக்கன் இனிய வார்த்தைகளைக் கூறினான்: “இசைவாணரே! எனது தேர்ப்பாகன் மாதலியுடன் ஆயிரம் குதிரை பூட்டிய எனது தேரைத் தங்களிடம் விரைவில் அனுப்பி வைப்பேன். அந்தத் தேரில் அமர்ந்து தாங்கள் தேவலோகத்துக்கு வரவேண்டும்” என்று கூறித் தனது இருப்பிடம் சென்றான்.