உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

படி போதிசத்துவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் முற்பிறவியிலே செய்த நற்செயல்களைக் கூறினார்கள். தேவ கன்னிகைகளில் மூத்தவள் கூறினாள்: “கஸ்ஸப புத்தர் வாழ்ந்திருந்த முன்னொரு காலத்திலே ஒரு பிக்குவுக்குச் சீவர ஆடையைத் தானம் செய்தேன். அந்தப் புண்ணியத்துக்காக அடுத்த பிறப்பிலே சக்கனுடைய தேவலோகத்திலே தேவ கன்னியரில் முதல் மகளாகப் பிறந்து, ஆயிரம் அரம்பையரைத் தோழியாகப் பெற்று வாழ்கிறேன்' என்று அவள் கூறினாள்.

மற்றொரு தெய்வமகள், பிச்சை கேட்ட பிக்குவுக்கு உணவு கொடுத்துப் பூசைக்குப் பூவும் கொடுத்தபடியால் இப்பிறப்பில் தெய்வமகளாகப் பிறந்ததாகக் கூறினாள்.

இன்னொரு தேவமகள், பிக்குகளின் அறவுரை கேட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்த புண்ணியத்தினால் தெய்வ மகளாகப் பிறந்த செய்தியைத் தெரிவித்தாள்.

மற்றொருத்தி, உணவு அருந்திய பிக்குவுக்குக் கைகழுவ நீர் கொடுத்த புண்ணியத்தினால் பொன்னுலக வாழ்க்கையடைந்த தாகச் சொன்னாள்.

வேறொருத்தி, மண்ணுலகத்தில் மானிடப் பெண்ணாக இருந்த போது தனது மாமனார் மாமியாருக்கு முகங்கோணாமல் கடமைகளைச் சரியாகச் செய்தபடியால், இப்பதவி பெற்றதாகக் கூறினாள்.

இன்னொரு தெய்வமகள், தான் மண்ணுலகத்தில் அடிமைப் பெண்ணாக இருந்தபோது, தனக்குக் கிடைத்த ஊதியத்தைத் தான தருமம் செய்தபடியால் விண்ணுலக வாழ்வு பெற்றதாகக் கூறினாள்.

இவ்வாறு, முப்பத்தேழு தேவ கன்னியர் ஒவ்வொருவரும், தாம் முற்பிறப்பில் செய்த நற்செயல்களையும், அதற்குப் பயனாக இந்திர லோக பதவி பெற்றதையும் போதிசத்துவருக்குக் கூறி னார்கள்.

இவற்றையெல்லாம் கேட்ட போதிசத்துவர், “நான் இங்கு வந்தது மிகவும் நல்லதாயிற்று. சிறிய நற்செயல்களும், சிறு தானங்களும் எவ்வளவு பெரிய நன்மையை யளிக்கின்றன என்பதை நான்