உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

131

எங்களைக் கேட்க? என்று இறுமாந்து விடைகூறி, யானையை வடக்குப் புற வாயில் வழியாகச் செலுத்தி நகரத்தைக் கடந்து சென்றார்கள்.

தங்கள் யானை போய்விட்டதைக் கண்ட நகர மக்கள் வெசந்தர குமாரன்மேல் சீற்றம் கொண்டு அவரைக் குற்றங்கூறிப் பழித்தார்கள். அருமையான யானை போய்விட்டதற்காக மனந்துடித்துச் சினங் கொண்டு எல்லோரும் திரண்டு பெருங் கூட்டமாக அரண்மனைக்கு வந்து அரசனிடம் முறையிட்டார் கள். “அரசர் பெருமானே! உமது நாடு அழிந்துவிட்டது. எங்களால் உயிர்போலக் கருதப்படுகிற மழைவளம் தருகிற வெள்ளை யானையை இளவரசர் பார்ப்பனருக்குத் தானம் செய்துவிட்டார். பார்ப்பனருக்கு உணவும் உடையும் உறையுளும் தானம் செய்யட்டும். பொன்னையும் பொருளையும் தானம் செய்யட்டும். வேறு எதையும் தானம் செய்யட்டும். நாங்கள் தடுக்கவில்லை. நாட்டுக்கே செல்வமாக விளங்குகிற வெள்ளை யானையை வெசந்தரகுமரன் ஏன் தானங்கொடுத்தார்? குடிமக்களாகிய எங்கள் முறையீட்டை அரசராகிய தாங்கள் கேட்டு முறை செய்யவேண்டும். தாங்கள் நீதிப்படி முறை செய்யா விட்டால், நாங்களே தங்களையும் தங்கள் குமாரனையும் தக்கபடி தண்டிக்க முற்படுவோம்" என்று கண்டிப்பாக முறையிட்டார்கள்.

நாட்டு மக்களின் சீற்றத்தையும், அவர்கள் பேசிய வார்த்தை களையும் கேட்ட அரசர் பெருமான், தன் குமரனுக்கு கொலைத் தண்டனை கொடுக்கும்படி அவர்கள் கூறுவதாக ஐயங்கொண்டார். “எமது வெசந்தர குமாரனுக்குக் கொலைத் தண்டனை கொடுக்க நாம் உடன் படோம். குமாரன் அத்தகைய குற்றம் ஒன்றும் செய்யவில்லை” என்று கூறினார் அரசர் பெருமான்.

66

ளவரசரைக் கொலை செய்யும்படி நாங்கள் சொல்ல வில்லை. சிறையில் அடைக்கவும் சொல்லவில்லை. அவரை நாடுகடத்திக் காட்டுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று நாட்டு மக்கள் கூறினார்கள்.

இதைக்கேட்ட அரசன், “நல்லது, அப்படியே ஆகட்டும். இன்று இரவு முழுவதும் இங்கே இருக்கட்டும். நாளைக் காலை யில் நீங்களே வந்து இளவரசனை நாடுகடத்திவிடுங்கள்” என்றுகூறி அவர்களை அனுப்பிவிட்டார். பிறகு, சஞ்சய மன்னன் வெசந்தர குமாரனுக்கு இந்தச் செய்தியைச் சொல்லும்படி ஒரு தூதனை அனுப்பினார். தூதன்