உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

157

தேடிக்கொண்டு காட்டில் ஓடுவாள். அப்போது அவளுக்கு, ஏதேனும் தீங்கு நேரிடக்கூடும். ஆகையால், பொழுது மறைவதற்கு முன்னே மத்தியை ஆசிரமத்துக்குப் போகவிடக்கூடாது." இவ்வாறு தேவர்கள் தமக்குள் யோசித்தார்கள். அவர்களில் மூன்று பேர், மத்தியை வெளிச்சம் இருக் கும்போது ஆசிரமத்துக்குப் போகாதபடி தடுக்க முன் வந்தார்கள். அவர்களில் ஒருவர் சிங்கமாகவும், ஒருவர் வரிப்புலியாகவும், மற்றொருவர் சிறுத்தைப் புலியாகவும் உருவங்கொண்டு, மத்தியார் ஆசிரமத்துக்குத் திரும்பி வருகிற வழியில் படுத்துக் கொண்டிருந்தார்கள்.

கிழங்குகளையும் கனிகளையும் கொண்டுவருவதற்குக் காட்டுக்குச் சென்ற மத்தி, 'நேற்று இரவு துன்பகரமான கனவு கண்டேன். இன்று விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும்’ என்று தமக்குள் எண்ணினாள். மண்வெட்டி தவறி விழுந்தது. கூடையும் தவறிற்று. வலது கண் புருவம் துடித்தது. பழங்கள் இல்லா மரங்கள் பழம் உள்ள மரங்கள் போலவும், பழம் உள்ள மரங்கள் பழம் இல்லாத மரங்கள் போலவும் அவளுக்குத் தோன்றின. தான் நடக்கிறாளா, ஓடுகிறாளா என்பதும் தெரியவில்லை.

பழங்களையும் கிழங்குகளையும் விரைவாகப் பறித்துக் கொண்டு, பொழுது சாயும் முன்பே வீட்டுக்குப் புறப்பட்டாள். வழி, நீண்ட ஏரிக்கரையின் ஓரமாக அமைந்திருந்தது. ஆசிர மத்துக்கு வர வேறு வழி கிடையாது. இந்த வழியாக வந்து கொண் டிருக்கும்போது, சிங்கமும், புலியும், சிறுத்தையும் வழியிலே படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். கண்டு மனமும் உடம்பும் நடுங்கி தூரத்திலேயே நின்று விட்டாள். மனம் துடித்தது. பொழுது சாயுமுன் வீட்டுக்குப் போக வேண்டும் என்னும் துடிப்பும், போகமுடியாமல் வழியிலே துஷ்ட மிருங்கள் படுத்திருக்கிற அச்சமும் அவர் மனத்தில் குடிகொண்டு, மனத்தை ஊசல் ஆட்டின. இது தவிர வேறு வழியும் கிடையாது. 'ஐயோ, பொழுது போகிறதே! வெகுதூரம் போகவேண்டுமே!' என்று சிந்தித்த வண்ணம் தூரத்திலேயே ஒளிந்திருந்தாள். பொழுது போயிற்று. சூரியன் சாய்ந்து மாலையும் வந்தது. மிருகங்கள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. செவ்வானம் வந்தது. கடைசியில் சூரியனும் மறைந்துவிட்டது. குழந்தைகள் பசியுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். பசுவை ஆவலோடு எதிர்பார்க்கும் கன் றைப்போல அவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். கணவரும் காத்துக் கொண்டிருப்பார். என்றும் இல்லாதபடி இன்று மட்டும் இந்தக் கொடிய மிருகங்கள் ஏன் வழி மறிக்கின்றன?