உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

161

கணவனைப் பார்த்து, "குழந்தைகள் எங்கே?” என்று கேட்டாள். 'அவர்களைப் பிராமணனுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டேன்.”

66

66

'இதைச் சொல்லாமல் ஏன் என்னை இரவு முழுவதும் அலைய வைத்தீர்கள்?”

66

‘உடனே சொன்னால், உன் இருதயம் வெடித்து நீ உயிர் நீப்பாய் என்று எண்ணி, அப்போது சொல்லவில்லை. மத்தி! பிராமணன் ஒருவன் வந்து பிள்ளைகளைத் தானங் கோட்டான். அவர்களை அவனுக்குக் கொடுத்துவிட்டேன். அவர்கள் சாகவில்லை. உயிருடன் இருக்கிறார்கள். இறந்து போனார்கள் என்று எண்ணி மனம் வருந்தாதே. அவர்களை மீட்டுக் கொள்ளலாம். தானம் கேட்டால், எப்படி இல்லை என்று சொல்லுவது? பெற்ற பிள்ளைகளை, அருமந்தக் குழந்தைகளைத் தானம் செய்வதைவிட உயர்ந்த தானம் என்ன இருக்கிறது? மத்தி, நீயும் இந்தத் தானத்தைப்பற்றி மகிழ்ச்சியடைய வேண்டும்.

وو

தன் அருமைக் குழந்தைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்த மத்தி, ஒருவாறு துக்கம் நீங்கினாள். இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, விண்ணுலகத்திலே சக்கன் (இந்திரன்), தனக்குள் எண்ணினான்: 'நேற்று வெசந்தர மன்னன் தன் அருமை மக்களைத் தானமாகக் கொடுத்துவிட்டார். அதனால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. இடி முழங்கிற்று. வேறு யாரேனும் இழிந்த மனமுள்ள தூர்த்தன் வந்து, மத்தியைத் தானமாகக் கேட்டால், அவளையும் இவர் தானம் கொடுத்து விடுவார். அப்படி நிகழ்வது கூடாது. நான் போய், மத்தியைத் தானமாகப் பெற்று, மறுபடியும் அவருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டு வருவேன். ஒரு தடவை தானம் வழங்கியவரை மறுபடியும் வேறு யாருக்கும் தானங்கொடுக்கமாட்டார்.

6

இவ்வாறு எண்ணிய இந்திரன், அதிகாலையில் ஓர் பார்ப்பனன் வடிவங்கொண்டு தடியூன்றி நடந்து காட்டுக்கு வந்தார். இவர்கள் இருந்த ஆசிரமத்தையடைந்தார்.

வெசந்தரகுமாரனைக் கண்டு, "தாங்கள் நலமாயிருக்கிறீர் களா? கனிகளும் கிழங்குகளும் கிடைக்கின்றனவா? உணவுக்கு முட்டுப்பாடில் லாமல் இருக்கிறீர்களா? ஈ எறும்புகளினாலும், காட்டு விலங்குகளி னாலும் துன்பம் இல்லாமல் இருக்கிறீர்களா?" என்று வினவினார். வெசந்தரகுமாரன் அவரை வணங்கி வரவேற்றார். ஆசனத்தில் அமரச்