உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

167

ஏரியின் எதிர்கோடியிலே கொடிகளும் தோரணங்களும் காற்றில் பறப்பதையும், யானைகளும் குதிரைகளும் கட்டப்பட்டிருப்பதையும் கண்டார். “யாரோ அரசன் காட்டில் வேட்டையாட வந்திருக்கிறான். அவன் நமக்குப் பகைவனாக இருந்தால் நம்மைக் கொன்று போடுவான்’ என்று கூறினார் வெசந்தரகுமாரன். மத்தி, கூர்ந்து நோக்கி, “அந்தச் சேனை நமது நாட்டுச் சேனைபோலத் தெரிகிறது” என்று கூறினார்.

வெசந்தரகுமாரனும் கூர்ந்து பார்த்துவிட்டு, "அப்படித்தான் தோன்றுகிறது” என்று சொன்னார். இருவரும் இறங்கிவந்து ஆசிரமத் தில் இருந்தார்கள்.

பாசறையில் இருந்த சஞ்சய மன்னன் தனது இராணியிடம் கூறினார்: “நாம் எல்லோரும் சேர்ந்து திடீரென்று போனால் மகிழ்ச்சி யினால் அவர்களுடைய இருதயம் அதிர்ச்சிடையும். அதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடவும் கூடும். ஆகையால் ஒவ்வொருவராகப் போவது நலம். முதலில் நான் போகிறேன். பிறகு நேரங் கழித்து நீ வரலாம். நீ வந்த சில நேரங்கழித்துச் சிறுவர்கள் வரட்டும்.” இவ்வாறு சொல்லியபிறகு, அரசர் பெருமான் யானையின் மேல் அமர்ந்து, வெசந்தரகுமாரன் இருக்கும் ஆசிரமத்துக்கு வந்தார். வந்து, யானையை விட்டுக் கீழே இறங்கினார், அரசரைக் கண்டதும், வெசந்தர குமாரனும் மத்தியும் விரைவாகப் போய் அவரை வரவேற்றுக் காலில் விழுந்து வணங்கினார்கள். அரசர் பெருமான் அவர்களைத் தழுவி, மன வருத்தத்தோடு, “சுகமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டார்.

வெசந்தர குமாரன் கூறினார்: “நாங்கள் சுகந்தான். தங்களைப் பார்க்காத வருத்தந்தான் எங்களுக்கு உண்டு. அந்த வருத்தமும் இப்போது நீங்கிற்று. ஜாலியையும் கண்ணாவையும் ஒரு பார்ப்பனன் கொண்டு போய்விட்டான். அவர்களைப் பிரிந்த பிறகு, பாம்பு கடித்து விஷம் ஏறியவர்களைப்போல மயங்கிக் கிடக்கிறோம். சிறுவர்களைப் பற்றி தாங்கள் ஏதேனும் அறிவீர்களா?'

66

குழந்தைகளைப்பற்றி இனிக் கவலை வேண்டாம். அவர் களுக்கு உரிய விலையைக் கொடுத்து ஜாலியையும் கண்ணாவை யும் மீட்டுக்கொண்டோம்.'

இச்செய்தியைக் கேட்டவுடனே அவர்களுக்கு மனம் குளிர்ந்தது. முகம் மலர்ந்தது. மகிழ்ச்சியோடு காணப்பட்டனர்.