உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கவலைப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இந்தப் பிண்புலத்தில் கலைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கான விரிவான திட்டங்களை முன்வைப்பதைக் காணமுடிகிறது.

தமிழகச் சூழலில் சிற்பங்கள் என்னென்ன பொருட்களில் உருவாக்கப்படுகின்றன? அவ்வகையான சிற்பங்களைக் குறித்து எவ்வகையில் புரிந்து கொள்வது? தெய்வ உருவங்கள் இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், பிரதிமை உருவங்கள் என்று நான்கு பிரிவுகளாக சிற்பங்கள் அமைந்திருக்கும் பாங்கு ஆகிய பிறவற்றைக் குறித்த விளக்கங்களை இந்நூலில் காண்கிறோம்.

தெய்வங்களின் வழிபாட்டு மரபு என்பது உருவங்களைக் கட்டவிழ்த்து அதனை வழிபடும் போக்கில் அமைந்திருப்பதாகும். தமிழ்ச்சூழலில் எவ்வெவ் வகையான தெய்வ உருவச் சிலைகள் உருவாக்கப்பட்டன. அவ்வுருவங்களின் அமைப்புகளை எப்படிப் புரிந்து கொள்வது என்ற உரையாடல் இந்நூலில் விரிவாக இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். சைவ மரபு சிற்பங்களுக்கும் வைணவ மரபு சிற்பங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் அறிய முடிகிறது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் கற்சிற்பங்கள் நமக்கு மிகுதியாக கிடைக்கின்றன. தொடக்க கால கற்சிற்பங்களை உருவாக்கியவர்கள் பல்லவ மன்னர்கள் ஆவர். எனவே ஒவ்வொரு பல்லவ மன்னன் காலத்திலும் உருவான சிற்ப மரபு குறித்து இந்நூல் மூலம் அறிய முடிகிறது.

தமிழகக் கோயில் உருவாக்க வரலாற்றிற்கும் சிற்பக் கலைக்கும் நெருக்கமான உறவுண்டு. இத்தன்மை இந்நூலில் விரிவாக விவாதிக்கப் பட்டிருப்பதைக் காண முடிகிறது. குகைக் கோயில்களிலிருந்து தொடங்கி படிப்படியாக உருவான கோயில் மரபுகளை நாம் புரிந்து கொள்வது அவசியம். கோயில்களில் மாடங்கள் அமைக்கப்படுவதன் தன்மைகள் விரிவாகப் பேசப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

ஆலக்கோயில், இளங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், கொடுடிக்கோயில், மணிக்கோயில் எனப் பல்வேறு வகையான கோயில்கள் தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கும் பாங்கை அறிய முடிகிறது. இத்தன்மைகள் திராவிடக் கட்டிடக் கால வரலாற்றில் பெரும் பங்கு குறித்தும் நாம் அறிய முடியும்.