உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

முறையில் பாதுகாக்கப்படவேண்டும். கணக் கற்ற கற்சிலைகளும் பஞ்சலோகச் சிலைகளும் சிறிதும் சிதைவுபட்டு விட்டன என்னும் காரணத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன. பூசைக்கு உதவாத சிற்பக்கலை யுருவங்களை எறிந்து விடாமல் கோயிலின் ஒருபுறத்திலே பாதுகாக்க வேண்டும்.

பழைய சிற்பங்களின் சிறப்பு

சிதைந்துபோன சிற்ப உருவங்களை ஒரு மூலையில் போட்டு விட்டு, அதற்குப் பதிலாகப் புதிய உருவங்களை அமைத்து வழி படுகிற சில கோயில்களில், நான் கண்ட உண்மை என்ன வென்றால், சிதைந்துபோன உருவங்கள் கலையழகு நிரம்பப் பெற்று வெகு அழகாக இருப்பதும் அதைப்போலப் புதிதாக அமைக்கப்பட்ட உருவங்கள் கலையழகு இல்லாமல் இருப்பதும் ஆகும். இந்த உண்மையைக் கோயில் அதிகாரிகள் அறிந்து அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். சிதைந்துபோன சிற்ப உருவங்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அழித்துவிடக் கூடாது; விற்றுவிடவும் கூடாது; அவற்றைக் கலையுணர்வு படைத்த பலரும் பார்க்கும்படி பொது இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

பூமியில் புதைத்தல்

பின்னம் அடைந்து சிதைந்து போன சிற்ப உருவங்களைச் சில இடங்களில் பூமியில் புதைத்து விடுகிறார்கள். புதைக்கப்பட்டவை நாளடைவில் மறக்கப்பட்டு மறைந்து விடுகின்றன. செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மணிமங்கலத்துப் பெருமாள் கோயிலில் முன்பு இருந்தவராகப் பெருமாள் கற்சிலை சிறிது சிதைந்து போன காரணத்திற்காக அது அக்கோயில் தோட்டத்தில் புதைக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு பல சிற்பங்கள் பூமியில் புதைந்துள்ளன.

நீருக்குள் மறைத்தல்

சில டங்களில், பின்னம் அடைந்த சிற்பக்கலை உருவங்களை குளம் குட்டை கிணறுகளில் போட்டுவிடுகிறார்கள். பெரும்பாலும் கற்சிலைகளையே இவ்வாறு செய்கிறார்கள். ஏரிகளிலும் குளம் குட்டைகளிலும் இவ்வாறு போடப்பட்டுள்ள சிற்ப உருவங்களைக் கண்டிருக்கிறேன். நீரிலும், நிலத்திலும் மறைத்து அழித்துவிடுவதை