உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

29

என்று கூறிற்றாம். பிறகு அரசர் விசாரித்து உண்மை அறிந்து களவாடியவரைத் தண்டித்தாராம். நிற்க.

சமயப்பகையும் கலையழிவும்

சமயப்பகை காரணமாகவும் பல சிற்பக்கலை யுருவங்கள் அழிக்கப்பட்டன. பௌத்த சிற்ப உருவங்களை ஜைனர் சைவர் வைணவர்கள் அழித்துவிட்டதும், ஜைன சிற்ப உருவங்களைப் பௌத்தர் சைவர் வைணவர் அழித்துவிட்டதும், சைவ சமய சிற்ப உருவங்களை வைணவர் அழித்து விட்டதும் வைணவ சிற்ப உருவங்களைச் சைவர் அழித்து விட்டதும் சமயப் பொறாமையால் விளைந்த சிற்பக்கலை அழிவுகளாம்.

மாமல்லபுரத்துச் சிற்பக்கலை யழிவு

மகாபலிபுரத்தில் இராமாநுச மண்டபம் என்று இப்போது பெயர் வழங்குகிற குகைக் கோயில், ஆதிகாலத்தில் மும்மூர்த்திகளின் கோயிலாக இருந்தது. அது இராமாநுசர் பிறப்பதற்கு 500 ஆண்டு களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குகைக் கோயில். அத்யந்தகாம பல்லவேச்சரம் என்னும் பெயருடனிருந்த அந்தக் குகைக் கோயிலை, விஜயநகர அரசர் காலத்தில், வைணவர்கள் கைப்பற்றி இராமாநுச மண்டபம் என்று பெயர் கொடுத்து அதிலிருந்த சிற்பக்கலை உருவங்களை அடியோடு அழித்து விட்டார்கள்.

இந்தக் குகைக் கோயிலில் இருந்த துவாரபாலகர் உருவங்களையும் கருவறையின் சுவரில் இருந்த சோமஸ்கந்தர் உருவங்களையும் உளியினால் செதுக்கி அழித்துவிட்டதோடு மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் கற்பாறையில் பெரிய அளவில் புடைப்புச் சிற்பமாக5 அமைக்கப்பட்டிருந்த சிற்ப உருவங்களை உளிகொண்டு செதுக்கி அழித்துவிட்டார்கள். அழிக்கப்பட்ட அந்தச் சிற்பங்களின் உருவங்கள் எவை என்று இப்போது நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவை சைவ சமய சம்பந்தமான சிற்ப அ உருவங்களாக இருந்திருக்க வேண்டும்.

6

அவை அழிக்கப்படாமல் இப்போது இருக்குமானால் மகாபலிபுரத்தில் இன்னொரு இடத்தில் மகிஷாசுர மண்டபத்தில், இப்போது இனிய அழகிய கலைச் செல்வங்களாகக் காட்சியளிக்கிற