உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

2. சகர சாகரர் கதைச்சிற்பம்

மகேந்திரவர்மன் காலத்தில் மகாபலிபுரத்தில் (மாமல்ல புரத்தில்) அமைக்கப்பட்ட அழகான பாறைச்சிற்பம் “அர்ச்சுனன் தபசு” என்பது. இந்த அழகான புடைப்புச் சிற்பம்2 மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பட்டு இவன் மகன் நரசிம்மன் (மாமல்லன்) காலத்தில் முடிவு பெற்றது என்று கருதப்படுகிறது.

இந்தச் சிற்பம், ஏறக்குறைய தொண்ணூற்றாறு அடி அகலமும் நாற்பத்து மூன்றடி உயரமும் உள்ள செங்குத்தான பாறையிலே செதுக்கியமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரும் பாறையின் நடுப்பகுதி பிறவுபட்டு நீர் வீழ்ச்சிபோல அமைந் திருக்கிறது. இந்தப் பிளவுக்கு இரு புறத்திலும் தேவர், தேவமகளிர், கின்னரர், கிம்புருடர், குறள் உருவமுடைய பூதர்கள், நாகர், நாக கன்னியர்களின் உருவங்களும், மனிதர், முனிவர், யானைகள், குரங்குகள், பூனை எலி முதலிய உருவங்களும் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கண்ணையும்

கருத்தையுங்

கவர்கின்ற இந்தச் சிறந்த சிற்பத்தைக் காண்பவர் வியந்து மகிழ்ந்து பெருமைப்படாமல், இருக்கமுடியாது.

3

இந்தச் சிற்பத்தைப் பாமர மக்கள் இப்போது அர்ச்சுனன் தபசு என்று கூறுகிறார்கள். வேறு சிலர் பகீரதன் தபசு என்று கூறுகிறார்கள். பகீரதன் தபசு என்று கூறப்படுவது ஒரு சிறிது பொருந்தும். உண்மையில் இந்தச் சிற்ப உருவம் எந்தக் கதையைக் கூறுகிறது என்றால், பரதகண்டத்தை யரசாண்ட சகர சக்கரவர்த்தி, அவர் பிள்ளைகளான சாகர குமாரர்கள், அவர் பேரனான பகீரதன் ஆகியவர்களின் கதையைத்தான் இந்தச் சிற்பம் விளக்குகிறது. இந்தக் கதையை இங்குச் சுருக்கமாகக் கூறுவோம்.

சகர சக்கரவர்த்தி பாரதநாட்டை அரசாண்ட காலத்தில், அவர் ஒரு மலைக்குச்சென்று அங்கு இந்திரனை நோக்கித் தவஞ்செய்து நவநிதிகள் எனப்படும் ஒன்பது நிதிகளைப் பெற்றார். சக்கரவர்த்தி களுக்கு மட்டுந்தான் நவநிதிகள் கிடைப்பது வழக்கம். நவநிதிகளைப் பெற்றுச் செங்கோல் செலுத்தி அளவற்ற இன்ப சுகங்களை அனுபவித்துவந்த சகர சக்கரவர்த்திக்கு அறுபதினாயிரம் பிள்ளைகள்