உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

129

பக்கத்துச் சுவரிலும் எதிரெதிராக இந்தச் சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேற் புறத்தில் இந்த அரசர்களின்

பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

56. நரசிம்மவர்மன் : முதலாவது சிற்பம், வடபுறச்சுவரில் தெற்கு நோக்கி யிருப்பது. ஓர் அரசன் வட்டமான முக்காலிபோன்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான். இடது காலை மடக்கி ஆசனத்தின் மேல் வைத்து, வலது காலைக் கீழே தொங்கவிட்டுச் சுகாசனமாக அமர்ந்திருக்கிறான். தலையில், நீண்ட குல்லாய்போன்ற மகுடம் அணிந்திருக்கிறான். காதுகளில் குண்டலங்களும் கழுத்தில் மணி மாலையும் அணிந்திருக்கிறான். அறையில்மட்டும் வேட்டியணிந்து வெற்றுடம்போடு இருக்கிறான். இடதுகையை இடது தொடை மேல் வைத்து, வலதுகையில் ஏதோ (பூ) பிடித்திருப்பதுபோலக் காணப் படுகிறான். இவனுக்கு வலது இடது புறங்களில் இவனுடைய மனைவியரான இராணிகள் நிற்கிறார்கள். காதுகளில் மிகப்பெரிய பொற்குழைகளையும் தலையில் மகுடமும் அணிந்திருக்கிறார்கள். இந்த உருவத்துக்கு மேற்புறத்தில், பல்லவர்காலத்து எழுத்தினால் ஸ்ரீ சிம்ம விண்ண போத்ராதிராஜன் என்று கல்லில் பொறிக்கப் பட்டிருக்கிறது. ஸ்ரீ சிம்மவிஷ்ணு போத்ராதிராஜன் என்னும் அரசன் இவன் என்பதை இந்த எழுத்துக்களினால் அறியலாம். போத்ராதி ராஜன் என்றால் போத்தராசன் என்பது பொருள். பல்லவர்களுக்குப் போத்தராசன், போத்தரசன் என்னும் பொதுப் பெயர் உண்டு.

57. மகேந்திரவர்மன் : இதற்கு எதிர்ப்புறத்தில் வடக்கு நோக்கியிருக்கும் சிற்ப உருவத்தில், ஒர் அரசன் தன்னுடைய இரண்டு மனைவியரான இராணிகளுடன் நின்றுகொண்டிருக்கிறான். பக்கத்தில் நிற்கும் அரசியின் வலதுகையைத் தன்னுடைய இடது கையினால் பிடித்துக் கொண்டு, தனது வலது கைவிரலினால் (வராகப் பெருமாளைச்) சுட்டிக்காட்டுகிறான் இவன், தலையில் குல்லாய் போன்ற நீண்ட மகுடம் அணிந்திருக்கிறான். காதுகளில் அணிந்துள்ள பொற்குண்டலங்கள் தோள்களின் மேல் தொங்க, கழுத்தில் மணிமாலை தரித்திருக்கிறான். அறையில் மட்டும் வேட்டியுடுத்து வெற்றுடம்பாக இருக்கிறான். இவனுக்கு இடது பக்கத்தில் நிற்கிற இரண்டு இராணிகளும் தலையில் மகுடம் அணிந்து இருக்கிறார்கள். ஒர் இராணிக்கு வலதுகாதில் கனமான குண்டலமும் இடதுகாதில் மிகப்